eyebrow tips புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர சில பயனுள்ள குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 23 July 2021

eyebrow tips புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர சில பயனுள்ள குறிப்புகள் !!

புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர சில பயனுள்ள குறிப்புகள் !!


கற்றாழை ஜெல்லை இரவு படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் கண்கூடாக காணலாம்.

தேங்காய் எண்ணெய்யானது முடியின் வளர்ச்சியைத் தூண்டக்கூடியவை. எனவே இந்த எண்ணெயை தினமும் புருவங்களின் மீது தடவி வர, அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மயிர்கால்கள் வலுபெற்று புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும். விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் புருவங்களில் உள்ள முடிகள் நன்கு அடர்த்தியாக வளரும். இச்செயலை தொடர்ந்து 1 மாதம் பின்பற்றி வந்தால், உங்கள் புருவ அமைப்பில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். உடலும் குளிர்ச்சி  அடையும்.
 
பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ அதிகம் உள்ளது. இது முடிக்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டிவிடும்.

தினமும்  இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெய்யை புருங்களில் மென்மையாக தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் புருவ வளர்ச்சி தூண்டப்படும்.

No comments:

Post a Comment