எல்லா வகையான புண்களுக்கும் நிவாரணம் தரும் குப்பைமேனி !!
குப்பைமேனி கசப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், கீல்வாதம் முதலியவைகளைப் போக்கும். குப்பைமேனி இலை, வேர் ஆகியவை வாந்தி, பேதியை உண்டாக்கப் பயன்படுகின்றன.
குப்பைமேனி இலைத் தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். தோல் நோய்கள் குணமாக குப்பைமேனி இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவர வேண்டும்.குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, 3 மணிநேரம் ஊறவைத்து, கழுவி வரலாம். நீண்ட காலமாக உள்ள தோல் நோய்களுக்கு, குணமாகும்வரை பின்பற்றி வரவேண்டும்.
பூத்த குப்பைமேனியை வேறுடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து இதில் 2 அல்லது 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலை 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும் முற்றிலும் குணமாகும்.
குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணிநேரம் சென்று குளித்து வர சொறி, சிரங்கு, படை குணமடையும். எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.
குப்பைமேனி செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, இலேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க சளி இருமல் கட்டுப்படும்.
No comments:
Post a Comment