கை, கால் விரல் நகங்களை வைத்து நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை எப்படி கண்டறிவது...
இந்த கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் நிறைய மக்கள் நுரையீரல் பாதிப்புகளை பெற்று வந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள நிறைய மக்களுக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 2.3 மில்லியனுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக நோய்க்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. இதில் 37 மில்லியன் மக்கள் நீண்ட கால நுரையீரல் பாதிப்புடன் வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அமெரிக்க நுரையீரல் சங்கம் கூறியுள்ளது.
கடுமையான நுரையீரல் பாதிப்பு உள்ள மக்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படுகிறது என்று முதன்மை சுகாதார ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு குறிப்பிட்டு உள்ளது. நுரையீரல் புற்றுநோய்களில் 20% பாதிப்பு அடைந்த பிறகே எக்ஸ்ரே போன்ற ஸ்கேன் மூலமே கண்டறியப்படுகிறது. ஆரம்பத்திலேயே நுரையீரல் புற்று நோயை கண்டறிவது மட்டுமே நன்மை அளிக்கும். எனவே நோயாளிகள் விழிப்புணர்வு உடன் செயல்படுவது மிகவும் அவசியம்.
நுரையீரல் பாதிப்பு இருப்பவர்களுக்கு கை மற்றும் கால் விரல்களில் சில அறிகுறிகள் தென்படுகின்றன.
நுரையீரல் பாதிப்பு அதிகமான பிறகு கண்டுபிடிப்பது என்பது அதற்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போகி விடுகிறது. ஆனால் நுரையீரல் பாதிப்பு ஒருவருக்கு இருப்பதை அவரின் கை மற்றும் கால் விரல் நகங்களைக் கொண்டு அறிய முடியும். டிஜிட்டல் கிளிப்பிங் என்பது கை மற்றும் கால் விரல் நகங்கள் புடைத்து அசாதாரண வடிவில் காணப்படுவதை குறிக்கிறது. நுரையீரல் புற்று நோய், நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் நோய்களால் பாதிப்படைந்த வர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் என்பது நீண்ட கால நுரையீரல் நிலை ஆகும். இதில் நுரையீரலைச் சுற்றியுள்ள திசுக்கள் வடுவாகின்றன. இது நுரையீரல் புண்கள், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் அல்லது நாள்பட்ட நுரையீரல் தொற்று போன்றவற்றை குறிக்கிறது.
இதுகுறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் இரத்த ஓட்டத்தில் போதுமான ஆக்ஸிஜனை பெற உடல் போராடும் போது இது நிகழ்கிறது. இதனால் நீர்ச்சத்து நகங்களில் புகுந்து நகங்கள் புடைத்து காணப்படுகிறது.
No comments:
Post a Comment