These 5 Health Benefits Drink Ginger And Garlic Tea இஞ்சி, பூண்டு டீ தினமும் காலையில் குடிப்பதால் என்னென்ன பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday 31 July 2021

These 5 Health Benefits Drink Ginger And Garlic Tea இஞ்சி, பூண்டு டீ தினமும் காலையில் குடிப்பதால் என்னென்ன பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்...

இஞ்சி, பூண்டு டீ தினமும் காலையில் குடிப்பதால் என்னென்ன பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்...




நாம் இன்னும் கொரோனா தொற்றுக்கு நடுவேதான் இருக்கிறோம். பலரும் கொரோனா பரவலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதும் முக்கிய காரணம் என்பதை அறிவோம். எனவே நாம் அனைவரும் நமது உடல் ஆரோக்கியத்திற்கும் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முக்கியமான விஷயமாகும்.
ஒரு நல்ல நோயெதிர்ப்பு அமைப்பால் மட்டுமே வைரஸை எதிர்த்து போராட முடியும். அதற்காக உங்கள் தினசரி உணவில் ஆரோக்கியமான பொருட்களை சேர்க்க வேண்டியது அவசியமாகும். அதற்கு நாங்கள் உதவுகிறோம். இதில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒரு பானத்தை பற்றி கூற போகிறோம். இஞ்சி பூண்டு இவை இரண்டுமே அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்ட தாவரங்களாகும். மேலும் இவை அற்புதமான அளவில் மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. இவற்றை தினமும் உங்கள் உணவில் சேர்ப்பதற்கான எளிய வழி என்றால் தினமும் ஒரு கப் இஞ்சி பூண்டு தேநீர் சாப்பிடுவதுதான்.

இஞ்சி பூண்டு தேநீர் செய்முறை

தேவையான பொருட்கள்

பூண்டு- 1
இஞ்சி துண்டு- சிறிதளவு
நீர்- தேவையான அளவு
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
தேன்- 1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை முதலில் கொதிக்க வைக்கவும்

நறுக்கிய பூண்டு மற்றும் அரைத்த இஞ்சியை அதில் சேர்க்கவும்.

இவற்றை குறைந்த தீயில் சமைக்கவும்

கொதிக்கும் நிலையில் அதில் தேன் சேர்க்கவும்.

பிறகு ஆற வைத்து வடிக்கட்டவும்.

இப்போது சுவையான இஞ்சி பூண்டு தேநீர் தயார்.

இஞ்சி பூண்டு தேநீரை காலையில் உணவு உட்கொள்வதற்கு முன்பாக குடிக்கலாம். வெறும் வயிற்றில் இதை குடிப்பது உடலுக்கு கூடுதல் நன்மை பயக்கலாம்.

இஞ்சி பூண்டு தேநீர் குடிப்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இஞ்சி மற்றும் பூண்டு இரண்டுமே சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் மூலிகைகளாகும். மாதவிடாய் வலியை போக்கவும் செரிமானத்தை சரி செய்யவும் இது உதவுகிறது. மேலும் உடலுக்கு ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் கிடைப்பதற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment