பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது என சொல்வது ஏன்? என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்
அன்றாட உணவு பழக்க வழக்கங்களுடன் பழங்களையும் சேர்த்து சாப்பிட வேண்டும். அவற்றுள் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. தொடர்ந்து பழங்கள் சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம், நீரிழிவு, புற்றுநோய் போன்ற அபாயங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். அதோடு நம்முடைய உடல் அமைப்பும் பல்வேறு வகையான செரிமான நொதிகளை உற்பத்தி செய்கின்றன. அதேசமயம் பழங்கள் சாப்பிடும்போது சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். குறிப்பாக பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படி குடிப்பதால் என்ன மாதிரியான பிரச்சினைகள் உண்டாகும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
நம்முடைய வயிற்றில் இருந்து உற்பத்தியாகும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவு பொருட்கள் எளிதாக செரிமானம் ஆவதற்கு வழிவகை செய்யும். ஆனால் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால், அது அந்த அமிலத்தின் செயல்திறனை குறைத்துவிடும். அதனால் செரிமானத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடும். வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகம். அவற்றை சாப்பிட்டதும் செரிமானம் ஆவதற்கு குடல் இயக்கங்கள் மெதுவாக நடைபெறும். அந்த நேரத்தில் தண்ணீர் பருகினால் செரிமானத்தின் செயல்பாடு அதிகரிக்கும். அதிக நீரை ஈடு செய்வதற்காக வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது ஜீரண மண்டலத்தின் பி.எச். அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். சாதாரணமாக வயிற்றில் உள்ள அமிலத்தின் பி.எச். அளவு 1.5 முதல் 3.5 வரை இருக்கும். பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தீர்கள் என்றால் அது அமிலத்தின் அளவை குறையச் செய்து செரிமானத்தின் வேகத்தை பலவீனமாக்கும். அதோடு பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகினால் செரிமானத்தின் வேகம் குறைய தொடங்கிவிடும். சில சமயங்களில் வயிற்றில் உள்ள உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால் வயிற்று பிரச்சினைகள், கடுமையான வயிற்றுவலி கூட ஏற்படலாம்.
பழங்கள் பொதுவாக நெஞ்செரிச்சலை சரிசெய்யும் என்று சொல்லுவார்கள். ஆனால் பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் பழங்களில் உள்ள அமிலங்களால் வேதியியல் மாற்றங்கள் மிக வேகமாக நடக்கும். அதனால் இரைப்பையில் உள்ள நொதிகளின் செயல்பாடும் பாதிக்கப்படும். சாப்பிடும் உணவு ஜீரணமடைவதற்குப் போதுமான நொதிகள் உற்பத்தியாகமல் போகும் வாய்ப்புண்டு. அதனால் சிலருக்கு நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
No comments:
Post a Comment