How Does Covid-19 Affect The Brain? கோவிட் - 19 தொற்று நம்முடைய மூளையை எவ்வாறு பாதிக்கிறது? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday 31 July 2021

How Does Covid-19 Affect The Brain? கோவிட் - 19 தொற்று நம்முடைய மூளையை எவ்வாறு பாதிக்கிறது?

கோவிட் - 19 தொற்று நம்முடைய மூளையை எவ்வாறு பாதிக்கிறது?



கொரோனா தொற்று நோய் காலத்தில் மக்கள் கவனத்துடன் செயல்படுவது மிகவும் அவசியம். இந்த கால கட்டத்தில் மக்கள் ஆரோக்கியமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும். இதைத் தொடர்ந்து மக்களும் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் தன்னுடைய வீரியத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் வளர்ச்சி பரிணாமம் அடைந்து வருவதால் இதனால் ஏகப்பட்ட உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
கொரோனா வைரஸின் அறிகுறிகளும் கடுமையாகி வருகிறது. இது வரை வெறும் காய்ச்சல், சலதோஷம் என்று இருந்த அறிகுறிகள் தற்போது உடலில் உள்ள மற்ற உறுப்புகளான மூளையையும் பாதிக்கிறது. வெப்எம்டியின் ஆய்வின்படி, கோவிட் -19 ஐக் கொண்ட 7 பேரில் 1 பேர் நரம்பியல் பக்க விளைவுகளை அல்லது அவர்களின் மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் அறிகுறிகளை கொண்டுள்ளனர். அவர்களுக்கு குழப்பம், வாசனை இழப்பு, உயிருக்கு ஆபத்து, பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சரி வாங்க இந்த கோவிட் 19 எப்படி நம் மூளையை பாதிக்கிறது என அறிந்து கொள்வோம்.


கொரோனா வைரஸ் மூளைக்குள் ஊடுருவிச் செல்லும் திறன் படைத்ததாக இருக்கலாம். அந்த மாதிரி நடக்கையில் கடுமையான மற்றும் திடீர் தொற்று ஏற்படுகிறது. வைரஸ் ஆனது இரத்த ஓட்டத்தில் கலந்து நரம்பு மண்டலத்துக்குள் நுழைவதால் வாசனை இழப்பு போன்றவை ஏற்படுகிறது.

இந்த வைரஸை எதிர்க்க நோயெதிர்ப்பு அமைப்பு முயலும் போது அது திசுக்களுக்கும், உறுப்புகளுக்கும் சேதத்தை ஏற்படுத்துகிறது.

வைரஸ் காரணமாக உடலில் ஏற்படும் உளவியல் மாற்றங்கள் மூளை செயலிழப்புக்கு காரணமாக அமைகிறது.

இதனால் நோயாளிகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படுதல், இரத்த உறைவு போன்ற பல பிரச்சினைகளை உண்டாக்குகிறது. இரத்த உறைவால் மூளைக்குள் இரத்த கட்டிகள் ஏற்படுகின்றன. தமனிகள் அடைப்பால் பக்க வாதம் ஏற்படுகிறது.

​மூளை மூடுபனி :

கோவிட் 19 பாதிப்பால் மூளை மூடுபனி போன்ற சிக்கல்கள் உண்டாகிறது. கோவிட் 19 ல் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு இந்த அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் குறுகிய கால நினைவாற்றல், இழப்பு, கவனக் குறைவு, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குழப்பம், வாசனை இழப்பு, சுவை போன்ற அறிகுறிகளால் நீங்கள் பாதிக்கப்பட நேரிடலாம். தலைவலி, வலிப்புத் தாக்கங்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நீண்ட கால பாதிப்புகள் ஏற்படலாம்.

No comments:

Post a Comment