GREENS சிறுகீரையை வாரம் இருமுறை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday 22 July 2021

GREENS சிறுகீரையை வாரம் இருமுறை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள் !!

சிறுகீரையை வாரம் இருமுறை உணவில் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள் !!


Sirukeerai


சிறுகீரையில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்திருக்கிறது. இது கண்களில் கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விழிப்படலம், கருவிழி ஆகியவற்றின் நலத்தையும் மேம்படுத்துகிறது.

வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து,பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் சிறுகீரையில் நிறைந்துள்ளன இவை அனைத்தும் உடலின் எலும்பு  வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறதுசிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் சிறப்பாக செயல்பட சிறுகீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது  உதவுகிறது.
 
நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைகளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது.  மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் சிறுகீரை தீர்க்கிறது.
 
உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் பல ஆண்களுக்கு அவர்களின் விந்தணுக்கள் குறைந்து மலட்டுத் தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகமாகின்றன. இதை  சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத் தன்மை பிரச்சனை நீங்கும்.
 
சிறுகீரையை வாரம் இருமுறை சாப்பிடுபவர்கள் ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.

No comments:

Post a Comment