SODUKU THAKALI சொடக்கு தக்காளியில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 22 July 2021

SODUKU THAKALI சொடக்கு தக்காளியில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன?

சொடக்கு தக்காளியில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன?


Sodakku Thakkali


சாலையோரத்தில் அதிகளவில் காணப்படும் சொடக்கு தக்காளியை, சிறுவர்கள் உடைத்து விளையாடுவது வாடிக்கை.

அதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரியாமலேயே பழுத்த பழங்களை சிறுவர்கள் பறித்து சாப்பிடுவார்கள். அது, வலி நிவாரணியாகவும், கட்டிகளை போக்கும் தன்மை கொண்டதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் விளங்குகிறது. அதைவிட முக்கியம் புற்றுநோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.உடல்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் குணமாக: தேவையான பொருட்கள்: சொடக்கு தக்காளி செடியின் இலை, மஞ்சள் தூள். செய்முறை: ஒரு  பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து, அதனுடன் நறுக்கிய இலையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். 
 
பின்னர் அந்த நீரை வடிகட்டி, குடித்து வந்தால், உடல்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் குணமாகும். அதே போன்று புற்று நோய் இருப்பவர்கள் தொடர்ந்து  குடித்து வந்தால், புற்று நோய் வளர்ச்சி தடுக்கப்படும். மேலும், சர்க்கரை நோய்க்கும் நல்ல பலனைத் தரும்.
 
சொடக்கு தக்காளியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மிக அதிக அளவில் உள்ளதென அறிவியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. இதன் அற்புதமான பயன்களில் ஒன்று உங்கள் டி.என்.ஏ வில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களை  குணப்படுத்துவதாகும்.
 
சர்க்கரை நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
 
சொடக்கு தக்காளி சாப்பிடும்போது உங்கள் வயிறு விரைவில் திருப்தியான உணர்வை பெறும். இதனால் நீங்கள் மேற்கொண்டு எதையும் சாப்பிட தோன்றாது.  எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்த பொருளாகும்.

No comments:

Post a Comment