Hair care remedies (முடி கொட்டுதல்)
முடி கொட்டுதல்
* நன்றாகப் புளித்த தயிரில் நார்த்தங்காயை நறுக்கி சாறு பிழிந்து கலந்து தலைக்குத் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். அதன்பின் தலைக்குக் குளிக்கவும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால், பொட்டு, பொடுகுகள் குறைந்து ஒழியும்.
* முடி வளர்வதற்கு ‘நீலிபிருங்காதி தைலம்' மிகவும் நல்லது.
நாமே தயாரிக்கலாம். ஆழாக்கு சாறு எடுக்கவும். அதிமதுரம், குண்டுமணி பருப்பு ஆகியவற்றையும் தலா 5 கிராம் இடித்து பொடித்து பசும்பால் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பசும்பால், எருமைப்பால், தேங்காய்ப் பால், வெள்ளாட்டுப்பால் ஆகியவை தலா ஆழாக்கு வாங்கி ஒன்றாகக்கலந்து, அத்துடன் வைத்துள்ள சாறுகளையும் அரைத்து வைத்துள்ள மருந்துப் பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இவற்றை ஊற்றி, அடுப்பில் வைத்து காய்ச்சவும். நன்றாகக்காய்ந்து முறுகி வரும் பொழுது, இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். எண்ணையை தனியே எடுத்து சீசாவில் ஊற்றிவைத்து, நாள்தோறும் அதை தலைக்குத் தேய்த்து வர கூந்தல் 'கருகரு வென்று அடர்த்தியாக வளரும்.
*தலையில், சூடு அதிகமாக இருந்தாலும் பொடுகு இருந்தாலும் முடி உதிரும். ஆகவே, முடிஉதிர்வதை தடுக்க சூடு, பொடுகு இரண்டையும் ஒழிக்க வேண்டும்.
* வாரம் இருமுறை தலைக்குக் குளிக்க வேண்டும். குழாய்த் தண்ணீரை விட, ஆறு, அருவிகளில் குளிப்பது நல்லது. நாள்தோறும் தலைக்குத் தேய்க்க நாற்றம் நீக்கப்பட்ட விளக் எண்ணைய் பயன்படுத்துவது நல்லது. (ஆங்கில மருந்துக் கடைகளில் கிடைக்கும்)
* தலைமுடியின் வேர்களுக்கு வலுவைத் தருகிற சத்து இருந்தால் தலைமுடி உதிராது. தலைமுடிக்கு நீண்டநான் வலுவைத் தருகிறது வெந்தயம், வாரத்திற்கு ஒருநாள் வீதம் வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறவைத்த பின் தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி செய்தால் தலைமுடி உதிராமல் அடர்த்தியா வளரும். கறுப்பாகவும் பள பளப்பாகவும் தலைமுடி மின்னும்.
No comments:
Post a Comment