கொரோனாவால் ஏற்படும் தலைமுடி உதிர்வைத் தடுக்க நடிகை மலாய்கா இத தான் யூஸ் பண்ணாங்களாம்..!
நாளுக்கு நாள் கொடிய கொரோனா வைரஸால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரஸால் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் ஒருசில பக்க விளைவுகளை சந்திப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் ஒன்று தலைமுடி உதிர்வு.
46 வயதான பாலிவுட் நடிகையான மலாய்கா அரோரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு குணமாகியிருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதோடு கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் தலைமுடி உதிர்வை அதிகம் சந்தித்ததாகவும், அந்த தலைமுடி உதிர்விற்கு அவர் பயன்படுத்திய ஒரு இயற்கை வழி குறித்தும் தெரிவித்திருந்தார். இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தலைமுடி உதிர்வை சந்தித்ததாக ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியானா யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் சர்வைவர் கார்ப் பேஸ்புக் குழு கணக்கெடுப்பைச் சேர்ந்த டாக்டர் நடாலி லம்பேர்ட் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, அதிக கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் முதல் 25 அறிகுறிகளில் முடி உதிர்தல் இருப்பது கண்டறியப்பட்டது.
கோவிட் -19 இன் நீண்டகால தாக்கங்களை அனுபவித்த சுமார் 1500 பேர் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ‘long-haulers' என்று அழைக்கப்படும் இவர்கள், குமட்டல் மற்றும் மூக்கடைப்பை விட முடி உதிர்தலை அதிகம் அனுபவித்து தெரிய வந்தது.
கொரோனா நோயாளிகளுக்கு ஏன் தலைமுடி உதிர்கிறது என்பதை தெரிந்து கொள்ள பலரும் விரும்புகிறார்கள். இப்படி ஏற்படுவதற்கான காரணம் இன்னும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலரும் மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்தை அனுபவிப்பதால் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வகையான தலைமுடி உதிர்வு தற்காலிகமானது. ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்படும் போது, உடலில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்படுவதோடு, உடலில் ஒருவித அதிர்ச்சியும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, தொற்றுநோயாளிகள் ஆரோக்கியமான உணவை அதிகம் உண்ணாமல் இருப்பதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, தலைமுடி உதிர வழிவகுக்கிறது. இருப்பினும், விஞ்ஞான சான்றுகள் இல்லாமல், எதையும் உறுதியாக கூற முடியாது.
No comments:
Post a Comment