இருதய நோய்கள் வருவதை தடுக்க உதவும் மருத்துவ குறிப்புகள் !!
செம்பருத்தி இலைகள் சிலவற்றைப் பறித்துத் தண்ணீா்விட்டு நன்கு கழுவிச் சுத்தம் செய்து நன்கு மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு காலையில் உண்டு நீராகாரமும் பருகி வர இருதய நோய்கள் உங்கள் அருகில் வராது.
செம்பருத்தி இலைகளை மென்று சாப்பிட சிரமபடுபவா்கள், செம்பருத்தி பூக்களின் இதழ்களை நன்கு சுத்தம் செய்து, நீாில் நன்றாக கொதிக்க வைத்து கஷாயமாக பருக வேண்டும்
கஷயாத்திற்கு வைக்கும் தண்ணீா் பாதியளவாக வற்றும் வரை காய்ச்சி பிறகு அருந்த வேண்டும். இதனுடன் பசும்பால் சோ்த்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
வெள்ளைத்தாமரை இலைகளையும் இரண்டு கைப்பிடியளவு எடுத்து இதைப் போன்று நன்கு காய்ச்சி அதனுடன் தேன் கலந்து பருகலாம்.
நன்கு முற்றிய மருதமரத்தின் பட்டையை வெட்டி, சுத்தம் செய்து, கல்லுரலில் நன்கு இடித்துச் சாறு எடுத்துச் சிறிது தண்ணீா் சோ்த்துக் கஷாயமாக்கிப் பருகலாம்.
நெருஞ்சில் செடியை எடுத்து சுத்தம் செய்து, கல்லுரலில் இடித்து, சாறு பிழிந்து, போதிய தேன் கலந்து பருகலாம்.
பொதுவாகக் கரிசலாங்கண்ணிக் கீரை இருதய நோய்களைக் குணப்படுத்தும், அதிலும் மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையை தொடா்ந்து ஆறு மாதங்கள் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்கள் குணமாகும். காலையில் வெறும் வயிற்றில் தினந்தோறும் பச்சையாகப்ப பறித்து உண்டு வந்தால் இருதயம் நல்ல வலு பெரும்.
பூண்டு ஓரு அற்புத மருந்தாகும். இரவில் படுக்க செல்லும் முன், குறைந்தது நான்கு பரல்களை எடுத்து, நன்கு தோல்களை நீக்கி பச்சையாக உண்டு, நீராகாரம் பருக வேண்டும்.
No comments:
Post a Comment