முறையற்ற மாதவிடாய் சுழற்சிக்கு பயன்படும் இஞ்சி சாறு !!
மாதவிடாய்: பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலியை குறைக்க இஞ்சி உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் முறையற்ற மாதவிடாய் சுழற்சிக்கு இஞ்சி சாறு ஒரு ஸ்பூன், சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வரலாம்.
சருமம் மென்மையாக: தோல்நீக்கிய இஞ்சி சிறிய துண்டு, 2 டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவி வர சருமத்தை மென்மையாக்கும், என்றும் இளமையாக தோற்றத்தை தரும்.சுக்கு: திரிகடுகு சூரணத்தில் சேர்க்கப்படுகிறது. திரிகடுகு சூரணம் 2 கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்ட சளி, செரியாமை, ஆஸ்துமா ஆகியவற்றை நீக்கும்.
உணவுகளில் இஞ்சி: தேங்காய் சட்னியில் சேர்க்கப்படுகிறது. மேலும் குருமா, துவையல், டீ, ஆகியவற்றில் இஞ்சி சேர்க்கப்படுகிறது. இஞ்சி ஊறுகாயும் சிறந்ததாகும். சுக்கு ரசத்திலும் சேர்க்கப்படுகிறது.
தோல் நோய்கள் குணமாக: இஞ்சியை இடித்து வெயிலில் லேசாக காயவைத்து பிறகு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு லேசாக சூட்டுடன் குளித்து வர உடலில் உள்ள கொப்பளங்களை நீக்குமம். உள்ளங்கால், கைகளில் சிலருக்கு தோல் உரியும் இதற்கு இஞ்சியை சாறு எடுத்து சிறிது வெல்லம் சேர்த்து குடித்து வர விரைவில் குணமடையும்.
No comments:
Post a Comment