SUKKU MALLI COFFEE இருமலை குறைக்க உதவும் சுக்கு கருப்பட்டி காபி செய்வது எப்படி...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 17 July 2021

SUKKU MALLI COFFEE இருமலை குறைக்க உதவும் சுக்கு கருப்பட்டி காபி செய்வது எப்படி...?

SUKKU MALLI COFFEE இருமலை குறைக்க உதவும் சுக்கு கருப்பட்டி காபி செய்வது எப்படி...?

Sukku Kaapi

சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் சுக்கு - கருப்பட்டி காபி குடித்தால் விரைவில் குணமாகி நல்ல பலன் கிடைக்கும். இங்கு இதன் செய்முறையை கீழே பார்க்கலாம்.
 
தேவைப்படும் பொருட்கள்:

தண்ணீர் - 1 கப்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
கருப்பட்டி - 2 டேபிள் ஸ்பூன் பொடி செய்து கொள்ளுங்கள்
 
சுக்கு பொடி செய்ய:
 
உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் - 1/2 கப்
மல்லி (தனியா) - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
 
சுக்கு பொடி தயாரிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து வைத்து கொள்ளவும். பின் அதனை காற்றுப்புகாத வண்ணம் ஒரு  டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
 
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து நன்கு கலக்கி ஒரு 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனை இறக்கி வடிகட்டி இறக்கினால், சூடான கருப்பட்டி காபி தயார்.
 
மருத்துவ குண நலன்கள்:
 
தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, சளி, இருமல், தொண்டைக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு கப் கருப்பட்டி காபி குடிப்பது நல்ல நிவாரணம் தரும். மேலும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து,நமக்கு புத்துணர்ச்சியைப் பெற முடியும்.

No comments:

Post a Comment