HERBS அற்புத மருத்துவ குணங்கள் உள்ள ஆடா தொடை மூலிகை !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 22 July 2021

HERBS அற்புத மருத்துவ குணங்கள் உள்ள ஆடா தொடை மூலிகை !!

அற்புத மருத்துவ குணங்கள் உள்ள ஆடா தொடை மூலிகை !!

Adathodai leaf

ஆடா தொடை இலைச் சாறும் தேனும் சம அளவாக எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் நான்கு வேளை குடித்து வர, நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை குணமாகும். 

ஆடா தொடை இலையை குழந்தைகளுக்கு ஐந்து சொட்டும், சிறுவர்களுக்கு பன்னிரண்டு வயது வரை பத்துச் சொட்டும் பெரியவர்களுக்கு பதினைந்து சொட்டும் அளவாக கொடுத்தால் போதும்.இதன் இலைச்சாறு 2 தேக்கரண்டி எடுத்து எருமைப்பால் 1 டம்ளரில் கலந்து 2 வேளை குடித்து வர, சீத பேதி, இரத்த பேதி குணமாகும்.
 
ஆடா தொடை இலை 10 எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து 2 வேளை 48 நாட்கள் குடித்து வர, என்புருக்கி காசம் இரத்த காசம், சளிக் காய்ச்சல், சீதளவலி, விலாவலி நீங்கும்.
 
ஆடா தொடை இலை, கோரைக் கிழங்கு, பற்பாடகம், விஷ்ணு காந்தி, துளசி, பேய்ப்புடல், கஞ்சாங் கோரை, சீந்தில் வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர்  நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி 4 வேளை 50 மில்லியளவு குடித்து வர, எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.
 
ஆடா தொடை இலை, துளசி, குப்பைமேனி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க விஷம்  முறியும்.
 
ஆடா தொடை இலையுடன் சிவனார் வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, கட்டி போன்ற உள் இரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி, விஷம் குணமாகும்.
 
ஆடா தொடை இலையுடன் குப்பை மேனியிலையும் சம அளவாக எடுத்துச் சேர்த்து அரைத்து, பாவாடையின் நாடாப் புண் உள்ளவர்கள் இடுப்பைச் சுற்றிப் பற்றுப்  போட்டு வர, புண் ஆறி கறுப்புத் தழும்பும் மறையும்.

No comments:

Post a Comment