TURMERIC தினமும் மஞ்சளை பயன்படுத்தினால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 22 July 2021

TURMERIC தினமும் மஞ்சளை பயன்படுத்தினால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?

தினமும் மஞ்சளை பயன்படுத்தினால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?

Turmeric

தினமும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை ஏதேனும் ஒரு வடிவில் உணவில் அல்லது தோலின் மீது பயன்படுத்துங்கள். உணவுகளை சமைக்கும்போது மஞ்சள் தூளை பயன்படுத்துங்கள். செரிமான மண்டலத்தைச் சிறப்பாக இயங்கச் செய்யும்.

மஞ்சள் ரத்தத்தைச் சுத்திகரித்து, உடலின் அனைத்துப் பகுதிகளையும் சுத்திகரிக்கிறது. தோலின் நிறத்தை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீர் செய்து, தோலுக்கு சத்துக்களை அழைக்கிறது. அழற்சியை நீக்கும் மஞ்சள் பருக்களுக்கு மிகச் சிறந்த மருந்து. மஞ்சள் அனைத்து தோஷங்களை நீக்கி பித்தத்தை சமநிலைப் படுத்துகிறது. பித்தம் ரத்த சுத்திகரிப்பு மற்றும் கல்லீரல் சுத்திகரிப்புக்கு முக்கியமானது ஆகும். 
 
ஆட்டுப்பாலைக் காய்ச்சி மஞ்சளும் தேனும் கலந்து உறங்கச் செல்வதற்கு முன் பருகுங்கள். சீரான முறையில் தினமும் மஞ்சளை பயன்படுத்தினால் உடல்நலம்  பல்வேறு விதங்களில் மேம்படும்.
 
ஆயுர்வேதம், 'மஞ்சள் கலந்த பால் ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும்' என்கிறது. இது, ரத்த ஓட்டத்தை அதிகரித்து புத்துணர்வு தரும். நிணநீர் மண்டலம் மற்றும் ரத்தநாளங்களைச் சுத்தப்படுத்தி, அதிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
 
மஞ்சள் கலந்த பால், அழற்சி எதிர்ப்புத் தன்மை மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. வயிற்றில் புண், உடல்வலி, வீக்கம், வயிற்றுப்போக்கு மற்றும்  தலைவலிகளில் இருந்தும் நிவாரணம் தரும்

No comments:

Post a Comment