home-remedies-that-works-as-anti-ageing-tools-முகத்தில் உள்ள முதுமை சுருக்கங்களைப் போக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகள்! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 21 July 2021

home-remedies-that-works-as-anti-ageing-tools-முகத்தில் உள்ள முதுமை சுருக்கங்களைப் போக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகள்!

முகத்தில் உள்ள முதுமை சுருக்கங்களைப் போக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகள்!

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு 

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு போன்ற செயல்பட்டு, சருமத்தில் காணப்படும் முதுமைப் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களில் மாயங்களைச் செய்கின்றன. அதற்கு சிறிது நற்பதமான எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிஎலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு போன்ற செயல்பட்டு, சருமத்தில் காணப்படும் முதுமைப் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களில் மாயங்களைச் செய்கின்றன. அதற்கு சிறிது நற்பதமான எலுமிச்சை சாற்றினை சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால், ஒரு நல்ல வித்தியாசத்தைக் காணலாம். னால், ஒரு நல்ல வித்தியாசத்தைக் காணலாம்

தேங்காய் பால் 

தேங்காயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. அதோடு, இதற்கு சருமத்தை மென்மையாகவும், நீர்ச்சத்தை வழங்கி பொலிவோடும் வைத்துக் கொள்ளும் திறன் உள்ளது. அதற்கு துருவிய தேங்காயை அரைத்து பால் எடுத்து, அந்த பாலை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.

வெள்ளரிக்காய் 

வெள்ளரிக்காயில் உள்ள இனிமையான பண்புகள், கண்களுக்கு கீழ் உள்ள வீக்கம் மற்றும் கருவளையங்களைப் போக்க உதவும். அதற்கு வெள்ளரக்காயை அரைத்து அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி, சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.

ரோஸ் வாட்டர் 

ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுவதால் சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும். அதோடு திறந்துள்ள சருமத்துளைகள் இறுக்கமடையவும் உதவும். அதற்கு ரோஸ்வாட்டரை கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாற்றோடு சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் முகத்தில் தினமும் இரவு தூங்கும் முன் தடவி வந்தால், மறுநாள் முகம் நன்கு புத்துணர்சியுடன் பொலிவோடும் இருக்கும்.


No comments:

Post a Comment