மழைக்காலத்துல அதிகமா மேக் அப் போடாதீங்க, அது சருமத்தை என்ன செய்யும் தெரியுமா?
மழைக்காலத்தில் சருமம் காற்றில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக வறட்சி, எண்ணெய் பசை மற்றும் பாக்டீரியாக்களுக்கு ஆளாக கூடும். மழைக்காலங்களில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வழக்காமான சரும பராமரிப்பு அவசியம். அது குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
சருமம் பாக்டீரியாவால் பாதிக்கப்படக்கூடியது மற்றும் முகப்பரு மற்றும் சருமதடிப்பையும் உண்டாக்கலாம். இதையெல்லாம் தவிர்க்க முகத்தை 2 அல்லது 3 முறையாவது தினமும் சுத்தம் செய்யுங்கள்.
எப்போதும் தூங்குவதற்கு முன்பு சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இதனால் மாசுக்கள் சேராமல் சருமம் அழகாக இருக்கும்.
டோனர் பயன்படுத்துங்கள்சருமம் வறட்சியாக இருந்தால் பி.ஹெச் அளவை பரமரிக்க டோனர் மற்றும் சுத்திகரிப்பு பயன்படுத்த வேண்டும். எண்ணெய் சரும வகை, வறண்ட சருமம், சென்சிடிவ் சருமம், காம்பினேஷன் சருமம் என உங்கள் சருமத்துக்கேற்ற டோனரை பயன்படுத்துங்கள்.
ஹைட்ரேட்
சருமத்துக்கு மாய்சுரைசர் அவசியமே கோடைக்காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் மாய்சுரைசர் அவசியம். வறண்ட ஈரப்பதமான வானிலை சருமத்தை நீரிழப்புக்கும் உள்ளாக்கும். சருமத்துக்கு மாய்சுரைசர் பயன்படுத்துவதன் மூலம் சருமம் நீர்ச்சத்தோடு இருக்கும். மாய்சுரைசருக்கு ஜெல் மற்றும் க்ரீம் சார்ந்த மாய்சுரைசர் தேர்வு செய்யலாம்.
சன்ஸ்க்ரீன் தவிர்க்க வேண்டாம்
சன்ஸ்க்ரீன் கோடைக்காலத்தில் மட்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால் புற ஊதாக்கதிர்கள் மழைக்காலங்களிலும் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும். வெளியே செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்.
No comments:
Post a Comment