Effective Vital Vitamins For Healthy Skin And Hair In Tamil Skin And Hair : முகம் ஜொலிக்கவும், முடி வளரவும் இந்த அஞ்சு வைட்டமின் போதுமாம்! என்னென்ன தெரியுமா? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 28 July 2021

Effective Vital Vitamins For Healthy Skin And Hair In Tamil Skin And Hair : முகம் ஜொலிக்கவும், முடி வளரவும் இந்த அஞ்சு வைட்டமின் போதுமாம்! என்னென்ன தெரியுமா?

முகம் ஜொலிக்கவும், முடி வளரவும் இந்த அஞ்சு வைட்டமின் போதுமாம்! என்னென்ன தெரியுமா?


ஆரோக்கியமான தோல் மற்றும் சருமம் இரண்டுக்கும் உதவும் அத்தியாவசியமான வைட்டமின்கள் ஐந்து தான். நம் சருமமும் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்.அப்படி சருமத்துக்கும், கூந்தலுக்கும் முக்கியமான வைட்டமின் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மாசு, மன அழுத்தம், மோசமான உணவு முறை, ஜங்க் ஃபுட் போன்றவை எல்லாமே முகப்பரு, மந்தமான முடி, தோல் பிரச்சனைகளை உண்டாக்கும். சருமத்துக்கும் கூந்தலுக்கும் டோனர்கள், மாய்சுரைசர்கள் மற்றும் சீரம் பயன்படுத்தினாலும் உணவில் அனைத்து முக்கிய வைட்டமின்களின் சரியான அளவை பெறாவிட்டால் ஒரு போதும் சருமமும் முடியும் ஆரோக்கியமாக இருக்காது.

கூந்தல் நீளமாக இருப்பது உண்மையில் வைட்டமின்கள் ஆரோக்கியமாக இருப்பதால் தான். வைட்டமின்கள் சருமத்துக்கு தேவையான நுண்ணூட்டச்சத்துக்களை அளிக்கின்றன.



ஒளிரும் தோல் மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கான ரகசியம் சரியான ஊட்டச்சத்தை பெறுவதும் கூட அப்படியான முக்கிய ஐந்து வைட்டமின்கள் குறித்து பார்க்கலாம்.

​வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ சரும நன்மைகளில் முக்கியமானவை இது வயதான தோற்றத்துக்கு எதிராக செயல்படும். முகப்பருவை எதிர்த்து போராடும். ஹைப்பர் பிக்மெண்டேஷன், நேர்த்தியான கோடுகள் மற்றும் சிவத்தல் போன்றவற்றின் மேற்பூச்சு சிகிச்சைக்கு ரெட்டினோயிக் அமிலம் பரிந்துரைக்கப்படுகிறது.



வைட்டமின் ஏ புரத தொகுப்பானது உயிரணு வேறுபாட்டுக்கு உதவுகிறது. இது எபிலிடீஸ் திசுக்களை வலுப்படுத்த உதவுகிறது. இது முன்கூட்டிய வயதை தக்க வைத்து சேதமடையும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்க்க செய்கிறது. கொலாஜனை பாதுகாக்க செய்கிறது. சூரியனிடமிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.



வைட்டமின் ஏ கூந்தலுக்கு உயிரணுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் உலர்ந்த உச்சந்தலையை குணப்படுத்தும். இது அடர்ந்த பச்சை பழங்கள், இலை காய்கறிகள், ப்ரக்கோலி, இனிப்பு உருளைக்கிழங்கு, கீரை, கேரட், ஆப்ரிகாட், முட்டையின் மஞ்சள் கரு, விலங்குகளின் கல்லீரல் மற்றும் பாலில் உள்ளது.


No comments:

Post a Comment