பொடுகு, அரிப்பு, நமைச்சல், இளநரை எல்லாத்துக்கும் தீர்வு இந்த ஒரு உணவு! எப்படி சாப்பிடணும்!
கூந்தலின் ஆரோக்கியத்துக்கு போதுமான பராமரிப்புகள் இருந்தால் போதும் என்று நினைக்கிறோம். உண்மையில் பராமரிப்போடு ஆரோக்கியமான உணவுகளும் அவசியம்.
பால், பழங்கள், காய்கறிகள், கொட்டைகள் போன்ற ஊட்டச்சத்துக்களுக்கிடையே இன்னும் பல முக்கிய உணவுகளையும் உங்கள் கூந்தலுக்கு நீங்கள் சேர்க்க வேண்டும். அதில் ஒன்று முளைகட்டிய உணவுகள். நீங்கள் எப்படி எடுக்க வேண்டும். இது கூந்தலுக்கு செய்யும் நன்மைகள் என்ன என்பது வரை பார்க்கலாம்.
முளைகட்டிய உணவுகள்
முளைகட்டிய உணவுகள் என்பது பருப்புகள் அல்லது தானியங்களின் விதைகளாகும். இவை முளைத்து முன்கூட்டிய இளம் தாவரங்களாக மாறும். முளைக்கும் செயல்முறை இயற்கையானது. இந்த முளைப்பு விதைகளை தண்ணீரில் ஊறவைத்து பல மணி நேரம் வைத்திருந்த பிறகு வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் சரியான கலவையை வெளிப்படுத்த 2 முதல் 7 நாட்கள் வரை ஆகலாம்.
இந்த விதைகள் 2-5 செ.மீ நீளம் வரை முளைக்கும். இதன் ஊட்டச்சத்து சூப்பர் ஃபுட் ஆகும். இதை சிறிய அளவு எடுத்துகொள்வது கூட புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை நிறைவாக கொடுக்கும். இது செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முளைகட்டிய உணவுகளை இலேசாக வேக வைத்து சாலட் ஆக பொரியலாக செய்து சாப்பிடலாம்.
முளைகட்டும் முறை
மேற்சொன்ன முறையில் தண்ணீரில் வைத்து முளைகட்டுவதை காட்டிலும் நம் வீட்டு பெரியவர்கள் செய்யும் முறையில் முளைகட்டலாம்.
முளைகட்ட வேண்டிய விதைகள் அல்லது பருப்புகளை 8 மணி நேரம் ஊறவைத்து பிறகு வடிகட்டவும். அதை நீரில் வடிகட்டி பிறகு அதை மெல்லிய வெள்ளை துணியில் போட்டு மென்மையாக கட்டி விடவும். உள்ளே வெளிச்சம் போக வேண்டாம்.
பிறகு அதை 12 மணி நேரம் வரை சரியான பொருந்தும் அளவில் பாத்திரத்தில் சேர்த்து விடவும். பிறகு அதை எடுத்து பார்த்தால் முளைகட்டி இருக்கும். இது எளிதான முறையும் கூட. எல்லா தானியங்கள், பருப்புகள், விதைகளை இந்த முறையில் முளைகட்டிவிடலாம். இது கூந்தலுக்கு செய்யும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
No comments:
Post a Comment