Neem Benefits : வேப்பிலையின் மோசமான 6 பக்கவிளைவுகள் என்னென்ன? யாருக்கு ஆபத்து அதிகம்! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 30 July 2021

Neem Benefits : வேப்பிலையின் மோசமான 6 பக்கவிளைவுகள் என்னென்ன? யாருக்கு ஆபத்து அதிகம்!

Neem Benefits : வேப்பிலையின் மோசமான 6 பக்கவிளைவுகள் என்னென்ன? யாருக்கு ஆபத்து அதிகம்!

வேம்பு என்னும் வேப்பிலை ஆயுர்வேத மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. எனினும் இதன் அதிகப்படியான பயன்பாடு பக்கவிளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விளைவுகள் சமயங்களில் ஆபத்தை உண்டாக்கவும் செய்யும். வேப்பிலையின் பக்கவிளைவுகள் மற்றும் சரியான அளவு விகிதம் என்பவை என்ன என்பதை குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
வேப்பிலையின் பக்கவிளைவுகள் குறித்து பார்க்கும் போது அதன் நன்மைகள் குறித்தும் சுருக்கமாக தெரிந்துகொள்வோம். வேப்பிலை மரம் ஆகும். இதன் பல்வேறு பாகங்களும் வெவ்வேறு மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.



தொழுநோய் கண் வியாதி, வயிற்று கோளாறு, கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க வேப்பிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பட்டை முதன்மையாக மலேரியா, புண்கள் மற்றும் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

வேப்பிலை பூ பித்தத்தை குறைக்கவும் கபத்தை கட்டுப்படுத்தவும் குடல் புழுக்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பழம் மூல நோய், கபம், காயங்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.



இருமல், சிறுநீர் கோளாறுகள் மற்றும் குடல் புழுக்களுக்கு வேம்பு கிளைகள் பயன்படுத்தப்படுகின்றன. வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பல் துலக்குவதற்கு மாற்றாகவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.



வேப்பிலையின் சாறு மிகவும் பயனுள்ள டோனர்கள் மேலும் இது அஸ்ட்ரிஜெட்களில் ஒன்றாகும். பேன்களுக்கு சிகிச்சையளிக்க வேம்பு உதவுகிறது. பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் வேம்பு பல பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது. அது குறித்து தெரிந்துகொள்வோம்.தினந்தோறும் வேப்ப இலைகளை மூன்று வாரங்கள் தொடர்ந்து எடுப்பதன் மூல அவர்களுக்கு ஒவ்வாமை தொடர்பு ஸ்டோமாடிடிஸ் அதாவது வயிறு வீக்கம் பற்றி ஆய்வு ஒன்று விவாதிக்கிறது.



ஒவ்வாமை மற்றும் தடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க வேம்பு பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிகப்படியான பயன்பாடு ஒவ்வாமைக்கு வழிவகுக்கும். வேப்பங்கொட்டைகளை பயன்படுத்துவது பிற ஒவ்வாமைகளை மேலும் புரிந்து கொள்ள ஆய்வுகள் தேவை

No comments:

Post a Comment