Gastritis :இரைப்பை அழற்சி இருந்தா வயிறு முட்ட சாப்பிடகூடாது! வேறு என்னலாம் செய்ய கூடாது, செய்யவேண்டியது என்ன?
இரைப்பை அழற்சி இருக்கும் வயிற்றின் உட்புற வரிசையில் வீக்கம், வலி, மேல் வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல், ஏப்பம், உணவை வெளியே தள்ளுதல், குமட்டல் மற்றும் அவ்வபோது வாந்தி எடுத்தல் போன்ற அறிகுறிகளை எதிர்கொள்ளலாம்.
இரைப்பை அழற்சி நீண்ட காலமாக வலி நிவாரணிகள் பயன்படுத்துதல், ஆல்கஹால் மற்றும் சில நோய் எதிர்ப்பு அமைப்பின் நிலைமைகள் ஆகியவற்றால் இருக்கலாம். இந்த இரைப்பை அழற்சி இருக்கும் போது என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது, என்ன மாதிரியான உணவுகள் எடுக்கலாம், எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
பழங்கள் மிகவும் நார்ச்சத்து கொண்டவை மற்றும் இரைப்பை அழற்சியை எதிர்த்து போராட சரியான பி.ஹெச் அளவை கொண்டுள்ளன.
குறிப்பாக சிட்ரஸ் பழங்கள் உணவை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் இரைப்பை அமிலங்களை குறைக்க வயிற்றை சுத்தம் செய்யவும் உதவுகிறது. ஆரஞ்சு பழச்சாறு அல்லது எலுமிச்சை சாறு போன்ற சிட்ரஸ் பழச்சாறுகளை குடிக்கலாம்.இரைப்பை அழற்சி இருக்கும் போது அது சமயங்களில் தாங்க முடியாத வயிறு வலியை உண்டாக்கிவிடும். வயிறு வலிக்க தொடங்கும் . தலை பாரமாக இருக்கு.ம். சிலருக்கு வாய்வு வெளியேறிகொண்டே இருக்கும். அதிக அசெளகரியங்களை உண்டாக்கிவிடும்.
இரைப்பை அழற்சியின் இந்த அறிகுறிகள் அதிகமாக இருக்கும் போது இரைப்பை அழற்சி பிரச்சனைக்கு உடனடியாக நிவாரணம் பெற அல்லது அறிகுறி குறைய ஒரு டம்ளர் நீரில்கால் டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து சேர்த்து குலுக்கி குடிக்கலாம். இது வயிற்றில் பிஹெச் அளவை சமன்படுத்துகிறது.
No comments:
Post a Comment