Harmful Effects Of Stop Drinking Raw Milk In Tamil பாலை காய்ச்சாமல் குடித்தால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 30 July 2021

Harmful Effects Of Stop Drinking Raw Milk In Tamil பாலை காய்ச்சாமல் குடித்தால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்...

பாலை காய்ச்சாமல் குடித்தால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்...

நம்மில் பல பேருக்கு பாலை காய்ச்சாமல் அப்படியே குடிக்கும் பழக்கம் இருக்கிறது . உண்மையில் காய்ச்சாத பால் குடிப்பதற்கு சுவையாகவும் டேஸ்ட்டாகவும் இருக்கும். ஆனால் காய்ச்சாத பாலை குடிப்பதால் பசுவின் நோய்கள் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பது உங்க கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்யலாம். ஆனால் அந்த பாலை முறையாக சூடுபடுத்தி குடிப்பது அவசியம்.
பாலில் நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் நொதிகள் உள்ளன. ஆனால் அதே நேரத்தில் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் உச்ச நிறுவனமான உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ) கருத்துப்படி, விலங்கின பாலில் சால்மோனெல்லா, ஈ.கோலை மற்றும் லிஸ்டீரியா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே காய்ச்சாத பாலை குடிப்பதால் எந்த மாதிரியான பிரச்சினைகள் ஏற்படும் என அறிந்து கொள்வோம்.காய்ச்சாத பாலை பயன்படுத்திய ஐஸ்கிரீம், சீஸ் மற்றும் யோகார்ட் போன்றவற்றால் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) கருத்துப்படி 1993 - 2012 வரை 127 உடல்நல பாதிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில், காய்ச்சாத பாலை குடிப்பதால் 1,909 பேர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் 144 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.காய்ச்சாத பாலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் காணப்படுகிறது. எனவே அதை குடிக்கும் போது மூட்டு வலி, வயிற்று போக்கு மற்றும் நீரிழப்பு போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது.
காய்ச்சாத பாலை பசுவின் மடிக்காம்பில் இருந்து பிரித்தெடுக்கும் போது அதில் சிறுநீர் மற்றும் மலம் ஆனது கலக்கிறது. எனவே பாலை காய்ச்சாமல் குடிப்பது பாதுகாப்பற்றது. அதே மாதிரி காய்ச்சாத பாலில் உள்ள பாக்டீரியாவால் காசநோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உடையவர்கள் காய்ச்சாத பாலை குடிக்கக் கூடாது.காய்ச்சாத பாலை குடிப்பதால் உடலில் உள்ள அமில அளவு அதிகரிக்கும். அமில அளவை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம்.

யாருக்கு பாதிப்பு அதிகம் : கருவுற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உடையவர்கள் காய்ச்சாத பாலை குடிக்கக் கூடாது.

No comments:

Post a Comment