Which Fruits You Should Eat More According Your Health And Diseases என்ன நோய் இருப்பவர்கள் எந்த பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டும்? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 30 July 2021

Which Fruits You Should Eat More According Your Health And Diseases என்ன நோய் இருப்பவர்கள் எந்த பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டும்?


என்ன நோய் இருப்பவர்கள் எந்த பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டும்?

நம்முடைய உடலும் மனமும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு மிகவும் உதவியாக இருப்பது நாம் உண்ணும் பழங்கள் தான். நம்முடைய உடலுக்கு குறிப்பாக மூளைக்கு நேர்மறை ஆற்றல்களை வழங்குபவை பழங்கள் தான். பழங்கள் நார்ச்சத்துக்களும் வைட்டமின்களும் நிரம்பியவை.
பழங்களில் நார்ச்சத்துக்களுடன் கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக உள்ளன. அதனால் தினசரி உணவில் கட்டாயம் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய்கள் எதுவும் வராமல் தடுக்க முடியும். குறிப்பாக ஒவ்வொரு பழத்திலும் பிரத்யேகமாக சில வகை ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவை சில குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது. அவற்றைத் தெரிந்து கொண்டு சாப்பிடுவது இன்னும் சிறந்தது. சர்க்கரை நோயாளிகள் சில பழங்களைத் தவிர்ப்பது நல்லது. அப்படி குறிப்பாக, என்னென்ன நோய் அறிகுறி உள்ளவர்கள் என்னென்ன பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொண்டால் நீண்ட ஆரோக்கியமாக வாழ்க்கை வாழ முடியும். அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பழங்களில் உள்ள நார்ச்சத்து நம்முடைய ஜீரண மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. நாம் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்களை முறையாகப் பிரித்து வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி முறையாக ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. அதோடு மலச்சிக்கல் பிரச்சினைக்கு மிகச்சிறந்த தீர்வாக இருப்பவை பழங்களே. அதனால் எந்த வகை பழங்களாக இருந்தாலும் சரி ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 200 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்வது சிறந்தது. கண்பார்வையில் தெளிவு கிடைக்க, புற்றுநோய் செல்களை அழிக்க, குடலை சுத்தப்படுத்த என பல அற்புதமான நன்மைகளைப் பழங்களின் வாயிலாகப் பெற முடியும்.
ரத்த சோகைப் பிரச்சினை அதிகம் உள்ளவர்கள் அன்னாசிப் பழத்தை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி அதிக அளவில் அன்னாசியில் நிறைந்திருக்கிறது. ரத்தத்தில் புதிய செல்களை உருவாக்குகிறது. ரத்தத்தை விருத்தி செய்யும் தன்மை கொண்டது. ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் தங்களுடைய உணவில் தினமும் அன்னாசிப் பழத்தைச் சேர்த்துக் கொண்டே வந்தால், மிக விரைவிலேயே உங்களுடைய உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதைப் பார்க்க முடியும். குறிப்பாக பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களை அன்னாசி தீர்க்கும்.
விளாம்பழத்தை நம்முடைய முன்னோர்கள் நிறைய உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால் நாமோ இந்த பழங்களை சாப்பிட்டதே இல்லை என்று சொல்கிறோம். இறக்குமதி செய்யப்படும் பழங்களை விட நம்முடைய உள்ளூர் பழங்களை சாப்பிடுவது சிறந்தது என்பதை நாம் புரிந்து கொள்வதேயில்லை. விளாம்பழத்தில் இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் ஏவும் மிக அதிக அளவில் உள்ளது. விளாம்பழம் புளிப்பு சுவையுடையது. இதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்ந்து பிசைந்தோ ஜூஸாக்கியோ சாப்பிட்டால் பித்தம் தொடர்பான நோய்கள் குறையும். கண்பார்வை தெளிவாகத் தெரிய விளாம்பழத்தை நிறைய சாப்பிட வேண்டும். ஜீரணசக்தியை மேம்படுத்தும். பற்களை உறுதியாக்கும்
மலச்சிக்கல் என்றாலே நம்முடைய நினைவுக்கு வருவது வாழைப்பழமும் கொய்யாப் பழமும் தான். ஆனால் அதைவிடவும் சிறந்தது மாதுளம்பழம் என்பது நமக்குத் தெரியாது. ஆம். மாதுளைக்கு மலத்தை இளக்கக்கூடிய ஆற்றல் உண்டு. நீண்ட நாட்கள் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கூட தொடர்ந்து 5 நாட்கள் மாதுளம்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டு வர மலச்சிகக்கல் பிரச்சினை தீரும். தொண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும். தொடர்ந்து வறட்டு இருமலால் அவதிப்படுபவர்கள் மாதுளை சாறு 2 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட வறட்டு இருமல் நிற்கும். மாதுளை பழத்திற்கு மட்டுமல்ல அதன் தோலுக்கும் மருத்துவ குணங்கள் அதிகமுண்டு. மாதுளையின் தோலை நிழலில் உலர்த்தி பொடி செய்து சருமத்தில் தொடர்ந்து தடவி வர சருமப் பிரச்சினைகள் தீரும். அதே பொடியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட சீதபேதி நிற்கும்.
வாழைப்பழங்கள் எல்லா இடங்களிலும் எல்லா சீசனிலும் கிடைக்கும் பழம். நிறைய ஊட்டச்சத்துக்களும் சர்க்கரைச் சத்தும் நிறைந்தது. அதனால் சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாழைப்பழத்தில் நிறைய வகைகள் உண்டு. அதில் இனிப்புச் சுவை நிறைந்த ஒன்றுதான் செவ்வாழை. இந்த செவ்வாழையில் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. மூல நோய் பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக செவ்வாழை இருக்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். கண்பார்வை தெளிவடையும். குழந்தைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் தம்பதிகள் தொடர்ந்து செவ்வாழையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment