* பித்தத்தால் கால் வெடிப்பு ஏற்படுகிறது. உடலில் பித்தத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். காலில் எப்பொழுதும் செருப்பு அணிந்து கொள்ளவும். மெழுகுவர்த்தி களிம்பு தயாரித்து பயன்படுத்தி வரவும். கால் லிட்டர் தேங்காய் எண்ணய் அடுப்பில் வைத்து காய்ச்சவும். எண்ணய் காய்ந்ததும், ஒரு மெழுகுவர்த்தியில் நூலை உருவி விட்டு, சிறு துண்டுகளாகநறுக்கி, எண்ணெயில் போடவும். மெழுகு உருகி வரும். 'சீல்' அரக்கு, வெள்ளை குங்கிலியம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) ஆகியவை தலா 2 கிராம் வாங்கி பொடி செய்து. எண்ணயில் போட்டு கலக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்ததும் இறக்கி ஆற வைக்கவும். களிம்பு போல் ஆகி விடும். பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* இரவில் படுக்கும் பொழுது, இந்தக் களிம்பை எடுத்து காலில் பூசிக்கொள்ளவும். காலையில் எழுந்து குளித்தபின் மீண்டும் பூசிக் கொள்ளவும், தொடர்ந்து இதே போல பூசிவர குணம் ஏற்படும்.
No comments:
Post a Comment