உங்க உதடு கருப்பா மாறுவதற்கு நீங்க செய்யும் இந்த பழக்கம்தான் காரணமாம்...இனி அத செய்யாதீங்க..!
ஒருவரின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான இளஞ்சிவப்பு உதடு வைத்திருப்பது ஒருவர் முகத்தின் கவர்ச்சியான அம்சமாகும். யாரும் கண்டுபிடிக்க தவறாத ஒரு அம்சம். இளஞ்சிவப்பு உதடுகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆணின் முகத்திற்கும் கவர்ச்சியை சேர்க்கின்றன. ஆனால் வயதானது, சூரியன் பாதிப்பு போன்ற பல காரணிகள் உண்மையில் உதடுகளில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி அவற்றை விரைவிலையே கருப்பாக மாற்றும்.
உங்கள் உதடுகளை மீண்டும் அழகாகவும் இளஞ்சிவப்பு நிறமாகவும் மாற்ற பல வழிகள் உள்ளன. ஆனால், உங்கள் உதடு கருப்பாக நிறம் மாறுவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம். உங்கள் உதடுகளை மெதுவாக கருமையாக்கும் ஐந்து பழக்கங்கள் பற்றி இக்கட்டுரையில் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்குவதில்லை
உலர்ந்த மற்றும் வெடிப்புள்ள உதடுகள் உதடுகளில் நிறமாற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் உதடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஹைட்ரேட் செய்வது முக்கியம். உங்கள் உதடுகளை நன்றாக பராமரிக்க நல்ல லிப் பாம் தடவவும். கோகோ வெண்ணெய், ஷியா வெண்ணெய் போன்ற பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
இறந்த சருமத்தை அகற்றவில்லை வெளிப்புற உதடுகள் ஈரப்பதத்தை எளிதில் இழக்க முனைகின்றன. ஏனெனில் இது நம் முகத்தில் சருமத்தின் ஒல்லியான அடுக்கு. வெடிப்புள்ள மற்றும் உலர்ந்த உதடுகளிலிருந்து விடுபட, இறந்த சருமத்தை அகற்றவும், உங்கள் உதடுகளை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நீங்கள் வழக்கமாக எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment