கல்லீரல் என்ற மண்ணீரல் கோளாறு ஏற்பட காரணமாக அமைவது உணவு மாறுபாடு, அதிகமான புணர்ச்சி, தூக்கமின்மை, அதிக அலைச்சல், ஓய்வின்மை, பித்தம தன்னிலையினின்று கூடுவது, குறைவது முதலிய காரணமாகும். பித்தம் இரத்தத்தில் பரவிவிட்டால் படிப்படியாக பல துன்பங்கள் அதிகரிக்கும்.* நெல்லிக்காய் பருப்பை பதார்த்தங்களோடு கலந்து உண்டால் பித்தம் சாந்தமாகி கல்லீரல் பலப்படும். இது தவிர நெல்லிக்காய், பிஞ்சு, கடுக்காய் ஊறுகாயாக உபயோகிக்கலாம்.
* வன்னிமரத்தின் வேரை கொதிக்க வைத்து குடித்து வந்தால்
கல்லீரல் வீக்கம் & வலி கட்டுப்படும்.
* துளசிக் குடிநீர் அல்லது வேப்பம் பட்டைக் குடிநீர் இவை பித்த கபத்திற்குரிய மருந்துகள்.
* இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு காலையில் குடிக்க அழல், ஐயம், கிராணி ஆகிய முக்குற்ற நோய்களில் வறட்சியும், வெப்பமும் நீங்கும்.
* கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி மிளகு, உப்பு, சீரகம், சுக்கு சேர்த்து பொடியாக்கி சோற்றில் கூட்டி கொஞ்சம் நெய் விட்டு கலந்து உண்ண கல்லீரலில் ஏற்படும் பித்தம், கிராணி முதலியன நீங்கும்.
* கோரைக்கிழங்கு மேல் தோல் நீக்கி கஷாயம் தயாரித்து
பகுமோரில் கலந்து குடித்தால் வயிற்றிலுள்ள அழுக்கு, கல், மண்,
முடி இவற்றை பேதி மூலம் வெளியேற்றி விடும். கல்லீரல் பலப்படும்
No comments:
Post a Comment