onion benefits வெங்காயத்தில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 23 July 2021

onion benefits வெங்காயத்தில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள் !!

வெங்காயத்தில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள் !!

உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம்.
 
வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
 
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி  குறையும்.
 
கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.
 
வெங்காயச் சாறு வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
 
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில்  பற்றுப் போட தலைவலி குறையும்.

No comments:

Post a Comment