Green Beans அவரை மருத்துவம் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 24 July 2021

Green Beans அவரை மருத்துவம்

அவரை மருத்துவம்

அவரை - Meaning in English

கொடிக்காய்களில் சிறந்தது அவரைக்காய்.

மலிவான விலையில் நிறைய ஊட்டச்சத்தினைத் தருவது அவரை. புரதம், சுண்ணாம்புச்சத்து, இரும்பு, வைட்டமின்

சத்துக்கள் இதில் ஒருங்கே உள்ளன. மிக எளிதில் செரிமானமாகக் கூடியது அவரை. பலவினமான குடல் உடையவர்களும், இரவு நேரத்திலும், பத்திய உணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது.

முற்றிய அவரைக் காயை விட அவரைப் பிஞ்சே

நல்வது. வெண்ணிற அவரைக்காய் வாயு, பித்தம் இவற்றைக் கண்டிக்கும், உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்கும்; எரிச்சவை

அடக்கும். நீரிழிவு நோய், பேதித்தொல்லை, அடிக்கடி தலை நோய் வருதல், ஜீரணக் கோளாறு, சீதபேதி, இவற்றிற்கு

அவரையை அடிக்கடி உணவில் சேர்த்தால் பலனுண்டு. அஸ்ஸாமில் காது வலிக்கும், தொண்டை வலிக்கும் அவரைக்காயின் சாறைப் பயன்படுத்துகின்றனர், இரத்தக் கொதிப்பைத் தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு என்பது அண்மைய கண்டுபிடிப்பு.

அவரையைப் பற்றிய பழைய வைத்திய நூல்குறிப்பு கிடைத்துள்ளது; "கங்குல் உணவிற்கும் கறிக்கும் முறைகளுக்கும் பொங்குதிரி தோடதோர் புண்சுரத்தோர் - தங்களுக்கும் கண்முதிரைப் பில்லநோய்க்காரருக்குங் காமுறையா வெண்முதிரைப் பிஞ்சாம் விதி." தொடர்ந்து 40 நாட்கள் இப்பழத்தை உண்பவர்கள் தேகத்தில் ஆரோக்கியமான பளபளப்பு ஏற்படும். தீராத கோடை தாகத்தைத் தணிக்கும் ஆற்றல் அன்னாசிப் பழச்சாறுக்கு உண்டு.

No comments:

Post a Comment