PIMPLES CARE முகப்பரு அதிகமா வருதா? இதோ அதை மாயமாய் மறைய வைக்கும் அற்புத வழிகள்! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 21 July 2021

PIMPLES CARE முகப்பரு அதிகமா வருதா? இதோ அதை மாயமாய் மறைய வைக்கும் அற்புத வழிகள்!

முகப்பரு அதிகமா வருதா? இதோ அதை மாயமாய் மறைய வைக்கும் அற்புத வழிகள்!

லெமன் கிராஸ்/எலுமிச்சை புல்

\கோடைக்காலம் வந்துவிட்டது. வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. பலரும் கொளுத்தும் வெயிலால் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்தித்தும் வருகிறார்கள். அதில் கோடையில் பெரும்பாலானோர் அவதிப்படும் ஓர் சரும பிரச்சனை என்றால் அது முகப்பருக்கள் தான். உங்கள் முகத்தில் பருக்கள் அதிகமாக வந்து உங்கள் முக அழகை பாழாக்கிக் கொண்டிருக்கிறதா? அதைத் தடுப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

முகப்பருக்களைப் போக்க பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன. அதில் நாம் இப்போது பார்க்கப் போவது உணவுகளைப் பற்றியோ அல்லது ஃபேஸ் மாஸ்க்குகளைப் பற்றியோ அல்ல. மருத்துவ குணங்கள் நிறைந்த இலைகளைப் பற்றி தான். அதுவும் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய இலைகளைக் கொண்டே எளிதில் முகப்பருக்களை மாயமாய் மறைய வைக்கலாம். இப்போது முகப்பருக்களைப் போக்க உதவும் அந்த இலைகள் எவையென்பதையும், அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் பார்ப்போம்.

லெமன் கிராஸ்/எலுமிச்சை புல் 

லெமன் கிராஸ் என்னும் எலுமிச்சை புல்லில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. அதிலும் லெமன் கிராஸ் எண்ணெயில் உள்ள சிட்ரல் என்னும் உட்பொருள், சருமத்தை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி, சரும தொற்றுக்களைத் தடுக்கவும் செய்யும். அதற்கு அந்த எண்ணெயை இரவு தூங்கும் முன் பஞ்சுருண்டையில் நனைத்து முகப்பருக்களின் மீது தடவ வேண்டும்.


No comments:

Post a Comment