உங்களோட இந்த சாதாரண பழக்கங்கள்தான் உங்களை சீக்கிரம் வயதானவர்களாக மாற்றுமாம்... அது என்ன தெரியுமா?
இளமையாக இருக்கத்தான் நாம் அனைவரும் விரும்புகிறோம். சில பேருக்கு வயதானாலும், அவர்களுடைய தோற்றம் இளமையாகவே இருக்கும். அவர்களுடைய சருமமும் இளமையாகவே காட்சியளிக்கும். இன்னும் சிலருக்கு அவர்களுடைய வயதுக்கு அதிகமாகவே வயதானவர்களாக தோற்றமளிப்பார்கள். வயதாவது என்பது ஒரு தவிர்க்க முடியாத செயல் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் முன்கூட்டிய வயதானது என்பது நீங்கள் கவலைப்பட வேண்டிய ஒன்று.
இதற்கு உங்களுடைய உணவு முறையும், சில பழக்கவழக்கங்களும் காரணமாக இருக்கலாம். உங்கள் சருமத்திற்கு ஏற்ற விஷயங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இக்கட்டுரையில், உங்களை விரைவாக வயதானவர்களா மாற்றும் மிகவும் பொதுவான சில அன்றாட பழக்கங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது ஆல்கஹால் உட்கொள்வது நம் உடலில் பல உடனடி விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவை நமக்குத் தெரியாது. இது சருமத்தில் நீரிழப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும், இதன் விளைவாக முகம் விரைவில் வயதானதாக தோற்றமளிக்கும். ஆல்கஹால் உட்கொள்வது முகத்தின் மேல் சுருக்கங்களை ஏற்படுத்தும் மற்றும் கண்களின் கீழ் கருவளையத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
Read more at: https://tamil.boldsky.com/beauty/skin-care/common-habits-which-can-make-you-look-older-in-tamil/articlecontent-pf238038-031863.html
No comments:
Post a Comment