reasons-why-men-should-use-pre-shave-oil ஆண்களே! இனிமேல் ஷேவிங் செய்வதற்கு முன் எண்ணெயை பயன்படுத்துங்க.. - ஏன் தெரியுமா? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 21 July 2021

reasons-why-men-should-use-pre-shave-oil ஆண்களே! இனிமேல் ஷேவிங் செய்வதற்கு முன் எண்ணெயை பயன்படுத்துங்க.. - ஏன் தெரியுமா?

ஆண்களே! இனிமேல் ஷேவிங் செய்வதற்கு முன் எண்ணெயை பயன்படுத்துங்க.. - ஏன் தெரியுமா?

இயற்கையான ஈரப்பதத்தை வழங்குகிறது
தினமும் ஷேவிங் செய்தால், முகம் நல்ல பொலிவாகவும், புத்துணா்ச்சியுடனும் இருக்கும். ஆனால் அதே நேரத்தில் தினமும் ஷேவிங் செய்தால், முகத்தில் உள்ள தோல் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. இதை நிறைய ஆண்கள் அனுபவத்திருப்பாா்கள். அதாவது தினமும் ஷேவிங் செய்வதால், அது தோலில் வறட்சியை ஏற்படுத்தி, தோலைக் கடினப்படுத்துகிறது. அதனால் தோலில் இருக்கும் மென்மை குறைந்துவிடும். தினமும் ஷேவிங் செய்தால் தாடி முடிகள் மிகவும் கரடுமுரடாகிவிடும்.

ஆனால் இந்த பிரச்சினைகளைத் தீா்ப்பதற்கு, ஷேவிங் செய்வதற்கு முன்பாகப் பயன்படுத்தப்படும் முகச்சவர எண்ணெய்கள் (Pre-Shave Oil) பொிதும் உதவி புாிகின்றன. அவை முகத்தில் உள்ள மீசை மற்றும் தாடி முடிகளை மென்மையாக்கி, ஷேவிங் செய்வதற்கு உதவி புாிகின்றன.

இயற்கையான ஈரப்பதத்தை வழங்குகிறது 

ஷேவிங் செய்வதற்கு முன்பாகப் பயன்படுத்தப்படும் முகச்சவர எண்ணெய்கள், தாடிக்கு மட்டும் அல்ல, தோலுக்கும் ஈரப்பதத்தைத் தருகின்றன. இவை உராய்வு எண்ணெய்களாக இருந்து, மீசை மற்றும் தாடி முடிகளை மென்மையாக்கி, ஷேவிங் செய்வதை எளிமைப்படுத்துகின்றன. மீசை, தாடி முடிகளும், தோலும் மென்மையாக இருந்தால் ஷேவிங் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஆகவே ஷேவிங் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த எண்ணெய்களை முகத்தில் தடவ வேண்டும். அவற்றை முகத்தின் தோல் மற்றும் முகத்தில் இருக்கும் முடிகள் உறிஞ்சிய பின்பு, ஷேவிங் செய்தால் மிக எளிதாக இருக்கும்.

ரேசா்களினால் ஏற்படும் கீறல்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது

 பொதுவாக ஷேவிங் செய்யும் போது, ரேசா் மூலம் முகத்தில் கீறல்களோ அல்லது காயங்களோ ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆனால் முகச்சவர எண்ணெய்கள், ரேசா் மூலம் ஏற்படும் கீறல்கள் மற்றும் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. அதாவது ஷேவிங் செய்வதற்கு முன்பாக முகச்சவர எண்ணெயை நன்றாக தேய்த்த பின், சிறிது நேரம் கழித்துப் பாா்த்தால், அது தாடி முடிகளை முகத்தில் ஒட்டவிடாமல் வைத்திருக்கும். அதனால் ஷேவிங் செய்யும் போது ரேசா் தோலை அழுத்த வேண்டிய அவசியம் இருக்காது. எனவே ரேசா் மூலம் தோலில் எந்தவிதமான கீறல்களோ அல்லது காயங்களோ ஏற்படாது.


No comments:

Post a Comment