குழந்தைக்கு இனிப்புப் பண்டங்களை நிறையக் கொடுக்கம் கூடாது, இனிப்பினால்தான் புழு உண்டாகிறது. வயிற்றில் புழு இருந்தால், குழந்தை திடாக வளராது. குழந்தை பேதியாவதற்கு விளக்கெண்ணய் கொடுக்கவே கூடாது. நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போகும். ஆகவே, புழுக்களை ஒழிக்க வேண்டியது அவசியம்.
* இதற்கு குப்பை மேனி காயம் மிகவும் நல்லது. ஏழெட்டு குப்பை மேனி செடிகளை வேருடன் பறித்து வந்து, வேரை சுத்தமாகக் கழுவி வெட்டி எடுத்துக் கொள்ளவும். அம்மியில் வைத்து ஒன்று இரண்டாக நசுக்கி, வேர்களை ஒரு மண்சட்டியில் போடவும். அத்துடன் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைக்கவும். தண்ணீர் கண்டி, அரைதம்ளர் அளவு வரும். அப்பொழுது இறக்கி ஆறியதும், வேரைக் கசக்கிப் பிழிந்து எறிந்துவிடயும், கஷாயத்தை மட்டும் குழந்தைக்குக் கொடுக்காம். காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும். இரண்டு மூன்று முறை பேதியாகும். அப்பொழுது பூச்சிகளும் ஓழியும். மூன்று நானாக்கு ஒருமுறையாக மூன்று நாள் குடிக்க, பூச்சிகள் அடியோடு ஒழியும்.
* வேப்பிலையை இடித்து சாறு பிழிந்து இதைப் போல் அரைதம்ளர் அளவு கொடுக்கலாம். மூன்று நாள் குடிக்க பூச்சிகள் ஓழியும், மருந்து குடித்த நாட்களில் வெறும் மோர்ச்சோறு அல்லது ரசஞ்சோறு சாப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment