புளி ( Tamarind health benefits )
புளி
நாம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் அதே புளியின் மருத்துவக் குணங்களைப் பார்ப்போம். புளிப்பு சுவை கர்பிணியின் வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். எனவே தான் பெண்கள் கர்ப்பமான போது அதை விரும்பி உண்ணுகின்றனர்.
புளிய மர இலைகளை அவித்தோ அல்லது நசுக்கி நீர் விட்டு கொதிக்க வைத்து மூட்டுகளில் ஏற்படும் சுளுக்கு மற்றும் வீக்கத்திற்கு சூட்டோடு ஒற்றடம் இட்டு அதையே கட்டி வர குணமாகும்.
* புளியங் கொளுந்தை பறித்து பச்சையாகவே சாப்பிட்டு வர கண்களைப் பற்றிய நோய்கள், புண்கள் ஆறும்.
* புளியப் பூவை நெய்விட்டு வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வர பித்தம், வாந்தி, வாய் கசப்பு ஆகியவை தீரும்.
*புளியங்கொட்டையின் மேல் தோலை காய வைத்து தூளாக்கி
இதனுடன் மாதுளம் பழத் தோலையும் பொடித்து கலந்து தேன்
அல்லது சர்க்கரையில் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை
உட்கொண்டு வர புண்கள், நீர்க் கடுப்பு, வெள்ளை, வெட்டை,
கழிச்சல் ஆகியவை குணமாகும்.
* புளியையும் சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து தேள் கடி விஷத்திற்கு கடிவாயில் வைத்து கட்ட அது குணமாகும்.
* புளியம் பட்டையை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்து புண்களின் மீது பூசி வர அந்த புண் ஆறும்.
No comments:
Post a Comment