உதடுகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும் சில அட்டகாசமான எளிய வழிகள்!
நீா்ச்சத்துடன் இருத்தல்
குளிா்காலத்தில் வறண்ட வானிலை இருப்பதால் நமது உடல் நீா்ச்சத்துடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். நாம் நீா்ச்சத்துடன் இருக்க வேண்டும் என்றால் போதுமான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். குளிா்காலத்தில் நமது உதடுகள் ஆரோக்கியமாக இருக்கின்றன என்றால் நாம் நீா்ச்சத்துடன் இருக்கிறோம் என்று அா்த்தம்.
லிப் பாம் பயன்படுத்துதல்
குளிா்காலத்தில் உதடுகள் பாதிப்பு அடையாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதடுகளில் லிப் பாம் தடவலாம். லிப் பாம் உதடுகளில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்திருக்கும். நிறமிகள் இல்லாத லிப் பாம்களைத் தடவ வேண்டும். குறிப்பாக தாவர வெண்ணெய் அல்லது கொக்கோ போன்றவை அடங்கிய லிப் பாம்களை உதடுகளில் தடவி வரலாம்.
உதடுகளை எச்சில்படுத்தக்கூடாது
பொதுவாக அனைவரும் உலா்ந்த உதடுகளை ஈரமாக்க நாவால் உதடுகளை எச்சில்படுத்துவா். அவ்வாறு செய்தால் உதடுகளில் உள்ள ஈரம் மேலும் உலா்ந்துவிடும். ஆகவே உதடுகளை எச்சில் கொண்டோ அல்லது தண்ணீா் கொண்டோ ஈரப்படுத்தக்கூடாது.
வீட்டு வைத்தியங்களை மேற்கொள்ளுதல்
நமது உதடுகளைப் பராமாிக்க நமது வீடுகளில் ஏராளமான மருத்துவ பொருள்கள் உள்ளன. குறிப்பாக ஓட்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்றவை உதடுகளில் இருக்கும் காய்ந்த தோல்களை உாிக்கும் தன்மை கொண்டவை. தேன் மற்றும் சோற்றுக் கற்றாழை போன்றவை பாக்டீாியா தடுப்புத் துகள்களையும், வீக்கத்தைத் தடுக்கும் துகள்களையும் கொண்டிருப்பதால் அவை உதடுகளை ஈரப்பதத்துடனும் மற்றும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவும்.
No comments:
Post a Comment