mistakes-that-prevent-hair-growth என்ன பண்ணாலும் முடி வளர மாட்டீங்குதா? அதுக்கு நீங்க செய்யுற இந்த தவறுகள் தான் காரணம்... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 21 July 2021

mistakes-that-prevent-hair-growth என்ன பண்ணாலும் முடி வளர மாட்டீங்குதா? அதுக்கு நீங்க செய்யுற இந்த தவறுகள் தான் காரணம்...

என்ன பண்ணாலும் முடி வளர மாட்டீங்குதா? அதுக்கு நீங்க செய்யுற இந்த தவறுகள் தான் காரணம்...

அதிகளவிலான வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்துவது
ஒருவரது அழகில் தலைமுடியும் முக்கிய பங்காற்றுகிறது. அனைவருமே நல்ல ஆரோக்கியமான முடியை விரும்புவோம். அதற்கு தலைமுடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்தால் மட்டும் போதாது, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தூக்க நேரம் போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும். அதோடு ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருந்தால், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். ஒருவர் அதிகமாக மன அழுத்தம் கொண்டால், அது நேரடியாக தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

சிலர் தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்கிறேன் என்ற பெயரில் ஒருசில தவறுகளை தெரியாமல் செய்து வருவார்கள். இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் பாழாவதோடு, அதன் வளர்ச்சியும் தடுக்கப்படும். எனவே நல்ல ஆரோக்கியமான மற்றும் வலிமையான முடி வேண்டுமானால், முதலில் நமக்கு இருப்பது எந்த வகையான தலைமுடி மற்றும் அதை எப்படி பராமரிப்பது என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம், எந்த மாதிரியான விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

அதிகமாக தலைக்கு குளிப்பது 

அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் தெரிய வேண்டும் என்பதற்காக பலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள் மற்றும் சில சமயங்களில் ஒரு நாளைக்கு 2 முறை குளிப்பார்கள். ஆனால் இது மிகப்பெரிய தவறு. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இது தலைமுடியை சேதப்படுத்தி, தலைமுடி உதிர வழிவகுக்கும். அதோடு தலைக்கு அடிக்கடி குளித்தால், அது தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெயை வெளியேற்றி, முடியை பொலிவிழந்தும், ஆரோக்கியமற்றதாகவும் காட்டும்.

அதிகளவிலான வெப்பமூட்டும் கருவிகளை பயன்படுத்துவது

 தற்போது மக்கள் தலைமுடிக்கு வெப்பமூட்டும் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். ஹேர் ஸ்ட்ரைட்னிங், ஹேர் கர்லர், ஹேர் ட்ரையர் போன்றவை தலைமுடியின் அமைப்பை சேதப்படுத்தும். மேலும் அது முடியின் முனைகளில் வெடிப்புக்களை உண்டாக்கி, முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே இம்மாதிரியான கருவிகளை அதிகம் உபயோகிப்பதைத் தவிர்த்திடுங்கள்.


No comments:

Post a Comment