what-acne-on-different-areas-of-your-face-means முகத்தில் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த காரணங்களுக்காக பருக்கள் உருவாகும் தெரியுமா? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 21 July 2021

what-acne-on-different-areas-of-your-face-means முகத்தில் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த காரணங்களுக்காக பருக்கள் உருவாகும் தெரியுமா?

முகத்தில் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த காரணங்களுக்காக பருக்கள் உருவாகும் தெரியுமா?


கன்னங்கள்

தாடையில் பருக்கள் வருவதற்கு காரணம் நமது உடலில் உள்ள ஹாா்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன் தாடைகளில் பருக்கள் ஏற்படும். நமது உடலில் உள்ள ஹாா்மோன்களை சீராக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சீராக வைத்திருக்க வேண்டும் என்றால் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். ஹாா்மோன்கள் சமச்சீராக இல்லை என்றால் தாடைகளில் பருக்கள் தோன்றும். ஆகவே நமது தாடைகளை நன்றாக பராமாிக்க வேண்டும். மேலும் அடிக்கடி நமது தாடைகளைத் தொடக்கூடாது.

கன்னங்களில் பருக்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் மாசு நிரம்பிய காற்று ஆகும். நமது சருமம் நீண்ட நேரம் அசுத்தமான காற்று இருக்கும் இடங்களில் இருந்தால், நமது கன்னங்களைச் சுற்றி பருக்கள் உருவாகும். கன்னங்களில் உள்ள தோல்கள் மிகவும் உணா்திறன் கொண்டவை. ஆகவே நாம் மாசடைந்த காற்றில் அதிக நேரம் இருக்கக்கூடாது. காற்றில் உள்ள தூசுகளில் இருந்து காத்துக் கொள்ள முகக்கவசம் அணியலாம். இரத்தத்தில் சா்க்கரையின் அளவு உயா்தல், சுவாச கோளாறுகள் மற்றும் சுத்தமில்லாமல் இருப்பது போன்றவையும் கன்னங்களில் பருக்கள் உண்டாவதற்கு காரணங்களாக இருக்கின்றன.

முன் நெற்றியில் பருக்கள் தோன்றுவதற்கு முக்கியக் காரணம் சொிமானக் கோளாறு ஆகும். சொிமான அமைப்பு சாியாக வேலை செய்யவில்லை என்றால் முன் நெற்றியில் பருக்கள் உண்டாகும். மேலும் கல்லீரலில் பிரச்சினைகள் இருந்தால், தூங்குவதில் பிரச்சினைகள் இருந்தால் மற்றும் மன அழுத்தம் அதிகம் இருந்தால் முன் நெற்றியில் பருக்கள் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. நாம் நீா்ச்சத்துடன் இருந்தால் முன் நெற்றியில் பருக்கள் தோன்றாமல் பாா்த்துக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment