தலைமுடி குறித்து ஆண்களின் மனதில் உள்ள சில தவறான எண்ணங்கள்!
ஹேர் ஜெல் தலைமுடியை உதிரச் செய்யும்
ஹேர் ஜெல்லிற்கும், தலைமுடி உதிர்வதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆம், தலைமுடிக்கு ஹேர் ஜெல்லைப் பயன்படுத்தும் போது, அது தலைமுடியை உலர வைத்து மெல்லியதாக காட்சியளிக்குமே தவிர, எந்த வகையிலும் தலைமுடி உதிர்தலுக்கு வழிவகுக்காது.
ஆண்களுக்கு கண்டிஷனர் தேவையில்லை
எந்த ஒரு முடி நிபுணரிடம் சென்றாலும், அவர்கள் உங்களிடம் தலைமுடிக்கு அவசியம் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டுமென கூறுவார்கள். தலைமுடியில் உள்ள அழுக்குகளைப் போக்க ஷாம்பு சிறந்த பொருளாக இருந்தாலும், தலைமுடி நல்ல ஊட்டச்சத்துடன் மென்மையாக வளர கண்டிஷனர் உதவுகிறது. சொல்லப்போனால் கண்டிஷனர் தலைமுடி சேதத்தைக் குறைப்பதற்கான பயன்படுத்தப்படுகிறது. எனவே அச்சமின்றி கண்டிஷனரை ஆண்களும் பயன்படுத்தலாம்.
மன அழுத்தம் முடியை நரைக்க வைக்கும்
இந்த எண்ணம் பெரும்பாலானோரின் மனதில் இருக்கும் ஒன்று என்றே கூறலாம். உண்மையில் தலைமுடி நரைப்பதற்கு காரணம், தலைமுடி அதன் நிறத்தை உருவாக்கும் திறனை இழந்தது தான். அதனால் தான் நரை முடி வரத் தொடங்குகிறது. மன அழுத்தம் இதற்கு எந்த வகையிலும் காரணமல்ல. அதோடு இதற்கு எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லை. மன அழுத்தம் வேண்டுமானால் தலைமுடி உதிர்தவற்கு வழிவகுக்குமே தவிர, அதனால் தலைமுடியின் நிறத்தை மாற்ற முடியாது.
No comments:
Post a Comment