ஓயாமை மருத்துவம்
"நான் ஓயாது சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறேன். நோய்வாய்ப்படுவதற்கு எனக்கு நேரமில்லை."
இப்படிச் சொல்லியே நோய் வராமல் விரட்டியடிக்க முடியும் என்ற சிந்தனையை உலகிற்கு வழங்கியவர் டாக்டர் ஐ.ஜி. ஸ்பர்ஸிம். இவர் தான் மண்டை அமைப்பு ஆராய்ச்சியலின் (Phrenology) தந்தை.
கடுமையான உடல் நோய்களையும், மன நோய்களையும் மனோ நிலைக்குத் தகுந்தபடி இடைவிடாமல் சுறுசுறுப்பான நிலைத்திட்டம் அமைத்துக் கொண்டு குணப்படுத்திக் கொள்ள முடியும்.
பரபரப்பு அடைந்து கொண்டு (tension) எந்நேரமும்
பொறுமையின்றி இயங்குவது வேறு, மனதில் பொறுமையும்
அமைதியும் கொண்டு உடலில் சுறுசுறுப்புடன் ஓயாமல் இயங்குவது
ஓயாது அழும் குழந்தைகளுக்கு: கசகசாவை மைபோல்
அரைக்க, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவுக. அழுகை
அடங்கும்.
அம்மை வடிவு மாற: 10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளைச் சேர்த்து அரைத்துப் பூசிக் கழுவுக.
வயிற்றுப் போக்கிற்கு: நாலு விரற்கடை கசகசாவை எடுத்து அதை வாயில் போட்டு நன்றாக மென்று தின்று கொஞ்சம் தண்ணீர் குடிக்கவும்.
தேக அரிப்புக்கு: சகசா, கருஞ்சீரகம், காக்காய்க் கொல்லி விதை, நீர்வெட்டி முத்துப்பருப்பு இவை தலா கால் பலம், தேங்காய்க் கீற்று ஒன்று, இவற்றை ஒன்றாக, நன்றாக அரைத்துத் தேவையான அளவு தேய்த்துக் குளிக்கவும்.
சீதபேதிக்கு: தூய்மையான கசகசாவை லேசாக வறுத்து, அம்மியில் வைத்து மைபோல் தூள் செய்து, கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து அரைத்து, கொட்டைப் பாக்களவு காலை, மாலை சாப்பிடவும்.
கசகசாச் செடியின் விதையே நம் உணவிலும், மருந்திலும் பயன்படுத்தும் கசகசா, கசகசாச் செடியின் இளம்காயைக் கீறி அதிலிருந்து வடியும் பாலைக் காற்றில் உலர்த்தி எடுப்பதே "அபின்" என்ற லாகிரிப் பொருளாகிறது. இதைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment