vitamin A வைட்டமின் A அதிக அளவில் உள்ள பாலக்கீரை !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 20 July 2021

vitamin A வைட்டமின் A அதிக அளவில் உள்ள பாலக்கீரை !!

வைட்டமின் A அதிக அளவில் உள்ள பாலக்கீரை !!

Palak Keeraiபாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை அதிகம் சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும். 

பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு  ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது.

இதில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது.
 
இக்கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. இதன் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும்.
 
இதில் மெக்னீசியம், ஜின்க், காப்பர் மற்றும் விட்டமின் - கே  அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகின்றன. கண் பார்வை நன்றாக தெரிய இந்த கீரை உதவி செய்கின்றன. இதனை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம்.
 
இந்த கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

No comments:

Post a Comment