எள் மருத்துவம்
உடல் இளைக்க அல்லது பருக்க: காலை எழுந்தவுடன் சுமார் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள். 3 மணி நேரம் வேறு எதுவும் உண்ணக்கூடாது. குச்சி
உடம்பார்களுக்குச் சதை போடும். தடியர் இளைப்பர். படுக்கையில் சிறுநீர்: படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெண்முள்ளங்கியுடன் எள் சேர்த்துக்
கொடுத்தால். அப்பழக்கம் ஒழியும்.
மூல நோய் உடையவர்கள்: மூல நோய் உடையவர்கள் 5 கிராம் எள் விழுதுடன், 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் பயன் தெரியும்.
ரத்தக்காயம்: ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் நுரைத்த எள்ளுடன் தேனையும் நெய்யையும் கலந்து தடவ
குணமாகும். பல் பலவீனம் உடையவர்கள் ட தினசரி காலை ஒரு
வேறு. பரபரப்பு நோய் கொணரும்; சுறுசுறுப்பு நோய் நீக்கும். ஓயாமை மருத்துவம் சுறுசுறுப்பின் பாற்பட்ட திட்டமிட்ட நிதானமான வரிசையான வேலைகளால் அமைவது.
இடைவிடாத உழைப்பில் இருக்கும்போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் பலர், வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் பலவித நோய்களுக்குப் பலியாகிறார்கள். வார விடுமுறைகூட இல்லாமல் காலை முதல் இரவு வரை உழைக்கும். சைக்கிள் கடைக்காரர், முடிதிருத்துபவர். கடிகாரம் பழுது பார்ப்போர், பெட்டிக் கடைக்காரர் போன்ற இடைவிடா உழைப்பாளிகளைக் கவனியுங்கள். இவர்களின் இடைவிடா சுறுசுறுப்பால் இவர்கள் இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்கள். மந்தமாகக் கடனுக்கு வேலை செய்யும் அரசு அலுவலர்கள் பலர் அடிக்கடி நோய்வாய்ப்படுவது இதனுடன் ஒப்புநோக்கத்தக்கது.
சுறுசுறுப்பானவர்களுக்கு நோய் வந்தாலும், நோய் பாதிப்புக் குறைவாக இருக்கும். விரைவிலும் குணமாகும்.
நோய் வந்தால் செய்யும் 'ஓயாமை மருத்துவம்': சக்திக்கேற்றபடி படியுங்கள். ஓவியம் தீட்டுங்கள்- எழுதுங்கள். பயனாக ஏதாவது சிறு வேலை புரியுங்கள். ஆக்கப்பூர்வமாகச் செயல்படும்போது, அழிவுப்பூர்வமான நோய் பக்கமிருந்து உடல் அதிர்வுகள் திசை மாறி, உடலைக் குணப்படுத்துகின்றன.
1952இல் ஓயாமை மருத்துவர்களின் உலகக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இன்று 20 நாடுகளில் இம்மருத்துவர்கள் ஓயாமை மருத்துவம் செய்கிறார்கள்.
No comments:
Post a Comment