adathodai-is-a-wonderful-medicine-for-various-diseases பலவகையான நோய்களுக்கும் அற்புத மருந்தாகும் ஆடாதொடை !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 22 August 2021

adathodai-is-a-wonderful-medicine-for-various-diseases பலவகையான நோய்களுக்கும் அற்புத மருந்தாகும் ஆடாதொடை !!

Adathodai leaf

பலவகையான நோய்களுக்கும் அற்புத மருந்தாகும் ஆடாதொடை !!


ஆடா தொடை இலைச் சாறும் தேனும் சம அளவாக எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் நான்கு வேளை குடித்து வர, நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை குணமாகும். 

ஆடா தொடை வேருடன், கண்டங்கத்திரி வேர் சமஅளவு எடுத்து இடித்துப் பொடியாக்கி 1 கிராம் எடுத்து தேனில் கலந்து, 2 வேளையாக தொடர்ந்து சாப்பிட்டு வர, நரம்பு இழுப்பு, சுவாசகாசம், சன்னி, ஈளை, இருமல், சளிக் காய்ச்சல், என்புருக்கி, குடைச்சல் வலி குணமாகும்.

ஆடா தொடை இலையையும், காய்கள் இலைகளையும் வகைக்கு 1 கைப்பிடியளவு எடுத்து அரைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி 2 வேளையாகக் குடித்து வர, கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி குணமாகும்.
 
ஆடா தொடை உலர்ந்த இலையை பொடிசெய்து ஊமத்தை இலையில் சுருட்டு புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே நிற்கும். ஆடா தொடை இலை, துளசி,  குப்பைமேனி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க விஷம் முறியும்.
 
ஆடா தொடை இலையுடன் சிவனார் வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, கட்டி போன்ற உள்  இரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி, விஷம் குணமாகும்.
 
ஆடா தொடை இலையுடன் வேப்ப மர இலை, அரிவாள்மனைப் பூண்டு இலை, சிறியா நங்கை இலை சம அளவாக எடுத்து அரைத்து, புண்கள் மீது பற்றுப் போட, புண் ஆறி தழும்பும் மறையும்.
 
இதன் இலையுடன் குப்பை மேனியிலையும் சம அளவாக எடுத்துச் சேர்த்து அரைத்து, பாவாடையின் நாடாப் புண் உள்ளவர்கள் இடுப்பைச் சுற்றிப் பற்றுப் போட்டு  வர, புண் ஆறி கறுப்புத் தழும்பும் மறையும்.


No comments:

Post a Comment