foods-and-solutions-that-cause-diarrhea வயிற்று போக்கினை ஏற்படுத்தும் உணவுகளும் தீர்வுகளும் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 22 August 2021

foods-and-solutions-that-cause-diarrhea வயிற்று போக்கினை ஏற்படுத்தும் உணவுகளும் தீர்வுகளும் !!

diarrhoea

வயிற்று போக்கினை ஏற்படுத்தும் உணவுகளும் தீர்வுகளும் !!


பலர் உணவுகளால் வயிற்றுப் போக்கிற்கு ஆளாகியிருப்பார்கள். உதாரணமாக, காரமான உணவுகள், கடலைப் பருப்பு போன்றவற்றால் கூட சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கிறது.

பானங்களில் பால், காப்ஃபைன் போன்றவையும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். ஏன் மாசுப்படுத்தப்பட்ட உணவுகளில் பாக்டீரியாக்கள், வைரஸ் மற்றும் நச்சுக்கள் அதிகம் இருப்பதாலும், முறையற்ற குடலியக்கம் ஏற்பட்டு, அவை இறுதியில் வயிற்றுப் போக்கினை உண்டாக்குகின்றன.
 
வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த தீர்வு என்றால், நீரில், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். சிட்ரஸ் பழங்கள் இயற்கையிலேயே அதிக அமிலத்தன்மை கொண்டவை. எனவே அவை இரைப்பையில் ஒருவித இடர்பாட்டை ஏற்படுத்தி, அதில் உள்ள அமிலம் மலத்தை தளரச் செய்து, வயிற்றுப்  போக்கினை உண்டாக்குகிறது. 
 
சிட்ரஸ் பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை தான். ஆனால் அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அதனை அதிக அளவில் சாப்பிட்டால், அவை  இறுதியில் வயிற்றுப் போக்கிற்கு வழிவகுக்கும். எனவே இதனை அளவாக சாப்பிடுவது மிகவும் நல்லது.
 
முட்டைகோஸில் சல்பர் மற்றும் கரையாத நார்ச்சத்து இருப்பதால், அவை வாயுத் தொல்லையை உண்டாக்கி, வயிற்றுப் போக்கையும் உண்டாக்கும். ஏனெனில் இவை கரையாத நார்ச்சத்து கொண்டிருப்பதால், அவை நேரடியாக குடலை அடைந்து, வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது.
 
பூண்டிலும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இவையும் வாயுத் தொல்லையை உண்டாக்கி, வயிற்றுப் போக்கினை ஏற்படுத்தும். ஆகவே வயிற்றுப்  பிரச்சனை உள்ளவர்கள், பூண்டு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
 
பருப்பு வகைகளும் வயிற்றுப் போக்கினை உண்டாக்கக்கூடியவை தான். அவை செரிமானப் பிரச்சனையை உண்டாக்குவதோடு, சில நேரங்களில் செரிமானமாகாத உணவுப் பொருட்கள் நேரடியாக பெருங்குடலை அடைந்து, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் போக்கினை உண்டாக்கிவிடும்.
 
காரமான மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகள் எளிதில் செரிமானமடையாது. எனவே அவை வாயு தொல்லையை ஏற்படுத்தி, குடலியக்கத்திலும் இடையூறை  ஏற்படுத்திவிடும்.


No comments:

Post a Comment