aloe-vera-suitable-for-all-skin-types- எல்லா வகை சருமத்திற்கும் ஏற்ற கற்றாழை !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 13 August 2021

aloe-vera-suitable-for-all-skin-types- எல்லா வகை சருமத்திற்கும் ஏற்ற கற்றாழை !!

Aloe vera

எல்லா வகை சருமத்திற்கும் ஏற்ற கற்றாழை !!


சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து ஈரப்பதம் அளிக்கும். எல்லா வகை சருமத்திற்கும் ஏற்றது. 


முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமைப் பொலிவையும் தக்க வைத்துக் கொள்ள உதவும். குறிப்பாக வடுக்கள் இருந்த சுவடு தெரியாமல்  மறையும்.கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
 
கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்சனைகள் மற்றும் பொடுகை  நீக்குகிறது.
 
தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும்.  எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
 
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது.
 
சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக  தோற்றத்தை குணப்படுத்துகிறது.
 
முகத்தை அழகுபடுத்த  காயங்கள், சூடுகளில் ஏற்படும் கட்டி மறைய என பலவற்றிற்கு கற்றாழை பயன்படுகிறது. கண்களில் அடிபட்டதாலோ, இதர  காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வலி குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

No comments:

Post a Comment