karisalankanni-herb-that-gives-relief-for-many-diseases பல நோய்களுக்கு நிவாரணம் தரும் கரிசலாங்கண்ணி மூலிகை !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 13 August 2021

karisalankanni-herb-that-gives-relief-for-many-diseases பல நோய்களுக்கு நிவாரணம் தரும் கரிசலாங்கண்ணி மூலிகை !!

Karisalankanni

பல நோய்களுக்கு நிவாரணம் தரும் கரிசலாங்கண்ணி மூலிகை !!


பசுமையான கரிசலாங்கண்ணி இலைகளைச் சுத்தம் செய்து பசையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு ஒரு டம்ளர் மோரில் கலந்து, உள்ளுக்கு சாப்பிட்டுவர மஞ்சள் காமாலை குணமாகும். 
 


தோல் நோய்கள், மூலம், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வெட்டை நோய், ஊளைச்சதை, கல்லீரல் சம்பந்தமான காமாலை நோய்கள், மஞ்சள் காமாலை, வறட்டு காமாலை, ஊதுகாமாலை, வெள்ளை காமாலை உள்பட பல நோய்கள ை கரிசலாங்கண்ணி மூலிகை குணப்படுத்தும்.
 
தங்கச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ‘ஏ’ ஆகிய மூன்றும் ஒரு சேர சேர்ந்த மூலிகை தான் இது. கரிசலாங்கண்ணி தூளை ஒரு நாளைக்கு 5 கிராம் என்ற அளவில் தேனுடன் கலந்து சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 
 
கரிசலாங்கண்ணி மூலிகையை காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மிளகு 2, ஏலக்காய் 1 இவற்றை பொடி செய்து கால் தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடியுடன் கலந்தால் ஒரு கிளாஸ் டீத்தூள் ரெடி. இந்த பொடியுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்தால் மூலிகை டீ  தயார்.
 
தேங்காய் எண்ணெய்யில் தயாரித்த கூந்தல் தைலத்தை, தினமும் தலையில் தடவி வந்தால், தலைமுடி கருகரு என்று இருக்கும். குளிக்கும் முன் உடல் முழுவதும் நல்லெண்ணெய்யை தேய்த்தால் பித்த வெடிப்புகள் மறைந்துவிடும்.
 
கரிசலாங்கண்ணி பொடி, எண்ணெய் கொதிக்க வைத்த கலவையில் இருந்து எண்ணெய்யை வடிகட்டி எடுத்த பின், அடியில் உள்ள வண்டலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, தலையில் தடவினால் முடி கருத்த நிறமாக ஒரு மாதம் வரை இருக்கும்.

No comments:

Post a Comment