amazing-medicinal-benefits-of-vallarai-keerai வல்லாரை கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 13 August 2021

amazing-medicinal-benefits-of-vallarai-keerai வல்லாரை கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!

வல்லாரை கீரையின் அற்புத மருத்துவ பயன்கள் !!


வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் அதிகமாக உள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் இந்த கீரை கொண்டுள்ளது.

வல்லாரை கீரையானது இரத்தத்தை சுத்திகரிக்கிறது, ஞாபகசக்தியை அதிகரிக்கிறது. வல்லாரை கீரை உடலில் ஏற்பட்ட புண்களை ஆற்றும்.வல்லாரை கீரை தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு, பல் சம்பந்தமான நோய்கள் மற்றும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களை குணமாக்கும்.
 
வல்லாரை கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் தன்மை நீங்கும். வல்லாரை கீரை நரம்பு தளர்ச்சியை குணமாக்கி, மூளைச் சோர்வை நீக்கி மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
 
அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும், மங்களான பார்வையை சரி செய்யும். பால்வினை நோய்கள், வெண்குஷ்டம் போன்ற நோய்களுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.
 
பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கலாம்.
 
வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை நீங்கும்.
 
வல்லாரை கீரை பொதுவாக இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது. வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
 
வல்லாரை இலையை உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துபோகும்.

No comments:

Post a Comment