benefits-of-eating-a-cucumber-every-day தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 13 August 2021

benefits-of-eating-a-cucumber-every-day தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

ஒரு சில காய்கறிகள் பச்சையாகவே சாப்பிடும் வகையில் இருக்கின்றன. அப்படியான ஒரு காய் தான் வெள்ளரிக்காய். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

வெள்ளரிக்காய் நன்மைகள் நார்ச்சத்து நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் நார்ச்சத்து இருப்பது அவசியமாகும். இந்த நார்ச்சத்து தான் நமது உணவு எளிதில் செரிமானம் ஆகி மலச்சிக்கல், வயிறு கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. இது கோடைகாலங்களில் மிகவும் பிரச்சனை தரக்கூடியதாக மாறுகிறது. 
தினமும் காலை அல்லது மதிய வேளைகளில் சிறிது வெள்ளரிக்காய்களை சாப்பிடுவதால் நார்ச்சத்து கிடைக்க பெற்று செரிமான திறன் மேம்பட்டு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. 
 
வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன. தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துகொள்ள தினமும் ஒரு வெள்ளரிக்காயாவாது சாப்பிடும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். 
 
சிறுநீரகங்கள் நமது உடலில் இருக்கும் கழிவுகளை சிறுநீரில் வெளிவேற்றும் செயல்களை சிறுநீரகங்கள் செய்து வருகின்றன. கோடைகாலங்களில் உடல் அதிகம் வெப்பமடைவதாலும், நீர் அதிகம் அருந்தாமையாலும் நீர்ச்சுருக்கு, சிறுநீரக கற்கள் போன்றவை ஏற்படுகின்றன. 
 
தினமும் சில வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு சிறுநீரக கற்கள் ஏற்படாமல் காக்கும். நீர்ச்சுருக்கு போன்றவை குணமாகும். கண்கள் வெப்பம் அதிகம் ஏற்பட்டால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடும். மேலும் முதுமைகாலம் வரை கண்பார்வை தெளிவாக இருப்பதற்கு சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியமாகும். 
 
வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துகள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதீத வெப்பத்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது. 
 
நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரிக்காய்களை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமை தன்மையை கொடுக்கிறது. 

No comments:

Post a Comment