ayurvedas-remedies-for-indigestionஆயுர்வே தம் சொல்லும் செரிமான சிகிச்சை வழிகள் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday 30 August 2021

ayurvedas-remedies-for-indigestionஆயுர்வே தம் சொல்லும் செரிமான சிகிச்சை வழிகள்

Femina

ஆயுர்வேதம் சொல்லும் செரிமான சிகிச்சை வழிகள்


ஆரோக்கியமான உணவு வழிமுறையைப் பின்பற்ற என சில அடிப்படை வழிமுறைகள் உள்ளன. எப்போதும் நம் வீட்டில் பெரியோர்கள் சொல்லும் அறிவுரையும் இதுவாகத் தான் இருக்கும். அதாவது, உணவு உண்டு முடிந்தவுடன் தூங்கச் செல்வதோ, குளிப்பதோ, உடற் பயிற்சி செய்யவோ கூடாது. அதேபோல் சாப்பிட்டு முடித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும் கூடாது. தண்ணீர் குடிக்கவோ வேண்டாம்.

தற்போதைய காலகட்டத்தில் ஒருவரால் அமர்ந்து பொறுமையாகக் கூட உணவருந்த நேரமில்லை என்பதும் நிதர்சனம். அதனால் உணவை ஏனோதானோ என வாயில் அடைத்துக் கொண்டு ஓடுகிறோம். சிலர் சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று விரும்புவர். ஆனால் நேரமின்மை காரணத்தால் அவர்களால் சரியான வழிமுறைகளை பின்பற்ற முடியாது. அவர்களுக்கான சிறந்த வழி ஆயுர்வேதம் தான். அதேபோல் எப்படிப்பட்ட உணவுப் பழக்கம் இருக்கக் கூடாது என்பது குறித்தும் ஆயுர்வேதம் கூறுகிறது. அவை என்னென்ன பழக்கங்கள் என்று பார்க்கலாம் வாங்க.

​பிரிட்ஜ் வாட்டர்

நீங்கள் கோடை காலத்தில் வெளியில் சென்று வரும்போது ஏற்படும் தாகத்தை தணிக்க குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீரை எடுத்து அருந்துவீர். அந்த வெப்ப நிலையில் அது சுகமானதாகக் கூட இருக்கும். ஆமாம் தானே நம்மில் பலரும் இதைத் தானே செய்வோம். இது மிகவும் தவறான செயல் என்று நமக்குத் தெரியுமா...? உண்டு முடித்தவுடன் குளிர்ந்த நீரை குடிப்பது உங்கள் உடல் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் செரிமானத்திற்கு இடையூறு ஏற்படும். ஆயுர்வேதத்தைப் பொறுத்த வரை உணவுக்குப் பின் ஒரு சிப் அளவு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அதேவேளையில் அது பிரிட்ஜ் நீராகவும் இருக்கக் கூடாது. சாதாரண அறை வெப்ப நிலையில் உள்ள நீரையே உணவுக்குப் பின் அருந்த வேண்டும்.

​தவறான உணவுகளை சேர்த்தல்

சில வகை உணவுடன் ஒரு சில உணவை சேர்த்து உண்ணக்கூடாது. அப்படி உண்பதால், அதன் மூலம் பிடா மற்றும் கபா பிரச்சனைகள் ஏற்படும். அத்தோடு உங்களுக்கு சில வயிறு சம்மந்தமான கோளாறும் ஏற்படும். சில வகை உணவுகளை சேர்த்து உண்ணும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் அஜீரணம் ஆகாமல் இருத்தல், வயிறு உப்புசம் மற்றும் வாயுப் பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. உதாரணாமாக,நெய்யுடன் வாழைப்பழத்தையும், பாலுடன் முலாம் பழத்தையும் சேர்க்கக்கூடாது என்று கூறப்படுகிறது.கொழுப்பை ஒதுக்குதல்

நம்மில் பெரும்பாலானோர் கொழுப்பு உணவுகள் எடுத்துக் கொள்வதை அறவே விரும்புவதில்லை. கொழுப்பினை உண்டால் உடல் குண்டாகி விடும் என்ற பயமே கொழுப்பை ஒதுக்குவதற்கு காரணம். ஆனால், சரியான அளவில் கொழுப்பு நிறைந்த உணவுகளை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சரியான அளவிலான கொழுப்பு ஒருபோதும் ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. உண்மையில் ஆயுர்வேதத்தின்படி நமது உடல் சரியாக செயல்பட சில ஆரோக்கியமான கொழுப்புகள் தேவை என்று அறியப்பட்டுள்ளது.

​நின்று கொண்டே உண்பது

தற்போதைய அவரச உலகில் யாரும் சம்மணம் போட்டு உட்கார்ந்து உண்பதே இல்லை. நின்று கொண்டே தங்கள் உணவை அவசர அவசரமாக உண்டு முடித்து விடுகின்றனர். நீங்கள் நின்று கொண்டே உண்பதால் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், இது உங்கள் வயிற்றுப் பகுதியில் வீக்கம் மற்றும் வாயுப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆயுர்வேதத்தின்படி, நீங்கள் உண்ணும் தோரணை செரிமான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல் நீர் அருந்தும் போதும் நின்று கொண்டே குடிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

​வேகமாக சாப்பிடுதல்

உணவினை நன்கு மென்று உண்ணாமல் மிக வேகமாக வாயில் போட்டு முழுங்குவதும் உங்கள் செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தான் நம் முன்னோர்கள் நொறுக்கத் தின்றால் நூறு வயது என்று கூறியுள்ளனர். வேகமாக சாப்பிடுவதால் உங்களில் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதுமட்டுமின்றி, வேகமாக சாப்பிடுவது உங்கள் இன்சுலினையும் பாதிக்கும், பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். உணவை சரியாக மென்று உண்ணும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.


​குறைந்த சாப்பாடு

நம் உடலுக்குத் தேவையான உணவை நாம் தினமும் அதற்கு அளிக்க வேண்டும். ஆனால், இன்றைய நவ நாகரீக உலகில் குறைவாக சாப்பிடுவதையே பலர் பெருமையாகக் கருதுகின்றனர். இதிலும் மிக முக்கியமாக பெண்கள் தான் மிகவும் குறைவான உணவை உட்கொள்கின்றனர். நிறைய சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று குறைந்த அளவிலான உணவை உண்ணுகின்றனர். ஆனால், சரியான அளவில் நாம் உணவினை எடுத்துக் கொள்ளாவிட்டாலும் உடல் எடை அதிகரிக்கும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.எனவே பெண்களே, இதுநாள் வரை நீங்களும் இதுபோன்ற தவறுகளை செய்திருந்தால் திருத்திக் கொண்டு சரியான உணவு முறையைப் பின்பற்றி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழுங்கள். 

No comments:

Post a Comment