turmeric-to-fight-your-allergies- மஞ்சள் ஒவ்வாமை பிரச்சனைகளை சமாளிக்க உதவும் அருமருந்து. - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday 30 August 2021

turmeric-to-fight-your-allergies- மஞ்சள் ஒவ்வாமை பிரச்சனைகளை சமாளிக்க உதவும் அருமருந்து.

Femina

மஞ்சள் ஒவ்வாமை பிரச்சனைகளை சமாளிக்க உதவும் அருமருந்து.

மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஒவ்வாமை அறிகுறிகளை சமாளிக்க உதவும். மஞ்சள் சிகிச்சைக்கு உதவும் என்றாலும் அதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

ஆஸ்துமா ஒவ்வாமைகளுக்கு சிகிச்சையளிக்க மஞ்சள் உதவுகிறது. மஞ்சள் நிறத்தில் உள்ள பாலிபினோலிக் பைட்டோ கெமிக்கல் குர்குமின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. இது உடலில் அழற்சி மற்றும் அரிப்பை தூண்டும் கலவையான ஹிஸ்டமனை தடுக்கலாம். மேலும் இது நாசி நெரிசல், தும்மல் மற்றும் நெரிசல் நாசியழற்சியை போக்க உதவும். இதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

மஞ்சள் ஒவ்வாமைக்கு மருந்தாகுமா?

வற்றாத ஒவ்வாமை நாசியழற்சி கொண்ட 241 நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவர்கள் மஞ்சள் பயன்படுத்திய போது, இரண்டு மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. நாசி காற்றோட்டத்தை மேம்படுத்த குர்குமின் உதவியது கண்டறியப்பட்டது.

மஞ்சளை எலிகள் மீது மேற்கொண்ட ஆய்வில் இதில் உள்ள குர்குமின் சிறந்த அரிப்பு எதிர்ப்பு முகவராக இருப்பதை காட்டியது. ஹிஸ்டமைன் வெளியீட்டால் உடலில் தூண்டப்படும் அரிப்பை குறைக்க செய்யும். எலிகளின் உணர்ச்சி நியூரான்களில் குர்குமின் டிஆர்பிவி தடுக்கப்பட்டது. இது தான் வலி மற்றும் எரியும் உணர்வுகளுக்கு காரணமாகின்றன.

மஞ்சள் மேற்பூச்சி பயன்பாடுகள் மற்றும் வாய்வழியாக உட்கொள்வது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மசாலா அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளது. இது முகப்பரு . அடோபிக் டெர்மடிடிஸ், தடிப்புத்தொல் அழற்சி, அலோபீசியா மற்றும் விட்டிலிகோ பிரச்சனைகளை நிர்வகிக்க உதவுகிறது. ஒவ்வாமை பிரச்சனைக்கு மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

​தினசரி அளவில் மஞ்சளை எவ்வளவு எடுக்கலாம்

தினசரி அளவில் மஞ்சள் நுகர்வுக்கு அளவுக்கு மேல் எடுக்க கூடாது. உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி குர்குமினாய்டுகள் (மஞ்சள் நிறத்தில் இருக்கும் பினோலிக் கலவை) தினசரி அளவு வரையறுத்துள்ளது. ஒரு கிலோ உடல் எடைக்கு 0-3 மி. கிராம் அளவுக்குள் இருக்க வேண்டும்.

எனினும் மஞ்சள் தினசரி அளவில் எடுப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் அதற்கேற்ப எடுத்துகொள்ளலாம். இனி உணவில் மஞ்சள் தூள் சேர்ப்பதை தவிர்த்து மஞ்சளை வேறு எந்த வழிகளில் எடுத்துகொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.மஞ்சள் சேர்த்த பால்

பால் ஆரோக்கியத்துக்கு நல்லது. உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லையென்றால் நீங்கள் தேங்காய் அல்லது பாதாம் பாலுடன் மஞ்சள் சேர்க்கலாம். தேன் உங்களுக்கு ஒவ்வாமையை உண்டு செய்வதாக இருந்தால் நீங்கள் அதை தவிர்க்கலாம். இனிப்புக்கு நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள் 

பால் - 1 கப்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

தேன் - 1 டீஸ்பூன்

இலவங்கப்பட்டை - சிட்டிகை அளவு

மிளகுத்தூள் - 1 சிட்டிகை

இஞ்சி சாறு - கால் டீஸ்பூனில்

பாலை பாத்திரத்தில் சூடேற்றி அனைத்து பொருள்களையும் கலந்து மென்மையாக சூடாக்கவும். அவை கொதிக்க வருவதற்கு முன்கூட்டியே எடுத்து விடவும். தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் குடித்து வந்தால் போதுமானது. .

​மஞ்சள் தேநீர்

மஞ்சள் மற்றும் தேன் தேநீர் தும்மல், மூக்கு ஒழுகுதல், ஒவ்வாமை நாசியழற்சி அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. தேன் ஒவ்வாமை இருப்பவர்கள் தேனை தவிர்த்து நாட்டுச்சர்க்கரை, பனங்கருப்பட்டி சேர்க்கலாம்.
தேவையான பொருட்கள் 
தண்ணீர் - 1 கப்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

தேன் - இனிப்புக்கேற்ப

தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். இவை நன்றாக கலந்ததும் இறக்கி ஆறவைத்து தேன் சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவிடவும். தினமும் இரண்டு வேளை இதை குடித்து வரலாம். 


No comments:

Post a Comment