beauty-benefits-of-mint-in-skincare-in-tamil ஹீரோயின் மாதிரி நீங்க அழகாக இருக்க புதினா உங்களுக்கு எப்படி உதவும் தெரியுமா? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday 22 August 2021

beauty-benefits-of-mint-in-skincare-in-tamil ஹீரோயின் மாதிரி நீங்க அழகாக இருக்க புதினா உங்களுக்கு எப்படி உதவும் தெரியுமா?

Beauty Benefits Of Mint In Skincare In Tamil

ஹீரோயின் மாதிரி நீங்க அழகாக இருக்க புதினா உங்களுக்கு எப்படி உதவும் தெரியுமா?


புதினா என்றாலே சாப்பிடும் பொருளாக தான் நம் நினைவுக்கு வரும். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக, உங்கள் சரும ஆரோக்கியத்தில் புதினா ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், புதினா அழகு சாதன பொருட்களிலும், தோல் பராமரிப்பு பொருட்களிலும் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. முகம் கழுவுதல், மாய்ஸ்சரைசர்கள் மற்றும் லோஷன்கள் போன்ற தோல் பராமரிப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் போது புதினா இலைகள் ஒரு முக்கிய அங்கமாக பயன்படுத்தப்படுகிறது. இது சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகிறது.


புதினா இலைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை சரும ஆரோக்கியத்தை பராமரிக்க பயனுள்ளதாக இருக்கும். புதினா இலைகளின் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஒரு சிறந்த கிளென்சர், டோனர் மற்றும் மாய்ஸ்சரைசராக வேலை செய்கின்றன. உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் புதினா இலைகளைச் சேர்ப்பதன் சில அறியப்படாத நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.


முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கிறது
புதினா இலைகளில் சாலிசிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது சருமத்தில் சரும எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு முகப்பரு வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. புதினா இலைகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் முகப்பருவையும் குணப்படுத்துகிறது. நீங்கள் செய்ய வேண்டியது புதினா இலைகளை முகப்பருவில் தடவி, அது காய்ந்து போகும் வரை 15 நிமிடங்கள் விடவும். இது முகப்பரு தழும்புகளை நீக்கி, சருமத்தின் துளைகளை சுத்தம் செய்யும்.

காயங்களை குணப்படுத்தும்
புதினா இலைகளில் உள்ள வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகள் வெட்டுக்கள், காயங்கள், கொசுக்கள் கடித்தல் மற்றும் தோல் அரிப்புகளை குணப்படுத்த உதவுகிறது. நீங்கள் புதினா இலை சாற்றை பிரித்தெடுத்து தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். இது காயங்களை குணப்படுத்த உதவுவதோடு, சருமத்தில் எரிச்சல் மற்றும் எரியும் உணர்வையும் ஆற்றும்

சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் நிறமாக்குகிறது
புதினா இலைகள் சருமத்தை இயற்கையாக டோனிங் செய்ய உதவும் ஒரு லேசான அஸ்ட்ரிஜென்டாக செயல்படலாம். இது துளைகளில் உள்ள அழுக்கை நீக்கி, சருமத்தை மிருதுவான மற்றும் நன்கு நீரேற்றமான தொனியில் மாற்றுகிறது. இது உங்கள் சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதில் நன்மை பயக்கும். முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளையும் தடுக்கும். புதினா இலை பேக்கை உங்கள் முகத்தில் தடவி 20 முதல் 25 நிமிடங்கள் வரை சுத்தமான நீரில் கழுவவும்.

No comments:

Post a Comment