mistakes-you-are-probably-making-while-selecting-shampoo உங்க தலைமுடிக்கு ஷாம்புவை பயன்படுத்தும்போது நீங்க செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா? - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Sunday, 22 August 2021

mistakes-you-are-probably-making-while-selecting-shampoo உங்க தலைமுடிக்கு ஷாம்புவை பயன்படுத்தும்போது நீங்க செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா?

Mistakes You Are Probably Making While Selecting Shampoo

உங்க தலைமுடிக்கு ஷாம்புவை பயன்படுத்தும்போது நீங்க செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா?

ஆண், பெண் இருவருக்கும் அழகு சேர்ப்பதில் அவர்களின் தலைமுடி முக்கியமான ஒன்றாகிறது. இருவரும் தங்கள் முடியின் மீது அதிக ஈர்ப்பை வைத்திருக்கிறார்கள். பளபளப்பான நீண்ட கூந்தல் பெறுவது என்பது அனைவரின் கனவாக இருக்கும். கூந்தல் பளபளப்பாகவும் பட்டு நிறமாகவும் இருந்தால் எவ்வளவு மகிமையானதாக இருக்கும். உங்கள் அழகை மேலும் அழகாக்குவதில் உங்கள் தலைமுடி முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தலைமுடியில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முடி உதிர்தல், முடி கொட்டுதல் மற்றும் வலுவிழந்த முடி போன்ற பிரச்சனைகளுக்குப் பிறகு ஒருவர் பெறும் கருத்துகள் உணர்ச்சி ரீதியாக வேதனை அளிக்கின்றன.


முடி உதிர்தலுக்குப் பின்னால் உள்ள காரணம் நீங்கள் பயன்படுத்தும் முடி தயாரிப்பு அல்லது உங்கள் அடிப்படை சுகாதார நிலைமைகள் மட்டுமல்ல, நீங்கள் மறைமுகமாக சரியான பொருட்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதும்தான். சாஷ் தயாரிப்புகள் நடத்திய கணக்கெடுப்பின்படி, முடி தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும்போது 10,000 க்கும் மேற்பட்ட முடி பாதிக்கப்பட்டவர்கள் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டனர். தலைமுடி தொடர்பாக மக்கள் செய்யும் தவறுகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.


எதிர்மறையான தாக்கம்
சோடியம் லாரில் சல்பேட் (எஸ்எல்எஸ்), அம்மோனியம் லாரில் சல்பேட் (ஏஎல்எஸ்) ஆகியவை ஷாம்பில் சேர்க்கப்படுகிறது. அனானோனிக் சல்பேட்டுகளைக் கொண்ட ஷாம்பூக்கள், அதாவது, எஸ்எல்எஸ் மற்றும் ஏஎல்எஸ் ஆகியவை முடி மேற்பரப்பில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது ஒரு வலுவான சுத்தப்படுத்தியாகும். இந்த ஷாம்புவை தலையில் தேய்த்து குளித்தால், முடி உறை அடுக்குகளை அரித்து முடியை உலரச் செய்து உடைப்பை ஏற்படுத்தும்.

முடி உதிர்தல்
ஷாம்புக்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்துவதற்காக இருக்க வேண்டும் என்பதற்காக, அவற்றில் பதப்படுத்தும் கெமிக்கல்களான பாராபீன்கள் அல்லது பார்மால்டிஹைடுகள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த கெமிக்கல்கள் முடியின் வேர்களை வலிமையிழக்கச் செய்து முடி உதிர்வதை அதிகப்படுத்தும். ஷாம்புவில் உள்ள சல்பேட் முடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதில் முடியின் முனைகளில் வெடிப்புக்களை ஏற்படுவதோடு, தலைமுடி மிகவும் வறட்சியுடன் இருக்கும். இதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு முடி உதிர்தல், உடைத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

மூலிகை ஷாம்பூக்களைப் பயன்படுத்துதல்
கரிம மற்றும் மூலிகை பொருட்களால் தயாரிக்கப்படும் ஷாம்புவில் H+ அயனிகள் நிறைந்துள்ளன. அவை உச்சந்தலையின் pH ஐ சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உச்சந்தலையின் சிறந்த pH 4.5-5.5 வரம்பிற்குள் இருக்க வேண்டும். எந்தவொரு தயாரிப்பிலும் அதிகப்படியான பொருட்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment